Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

காஷ்மீர் சம்பவம் : இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Oredesam by Oredesam
April 23, 2025
in இந்தியா, செய்திகள்
0
#PahalgamTerroristAttack

#PahalgamTerroristAttack

FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின் படி மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும் அதில்,  20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்தார். இன்று (ஏப்ரல் 23, 2025) அதிகாலை அவர் இந்தியா திரும்பினார். அது மட்டுமின்றி, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க உறுதியளித்துள்ளார்.

 இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த புனேவைச் சேர்ந்த சந்தோஷின் மகள் அசவரி, தனது தந்தையின் மரணத்திற்கு முன் நடந்த பயங்கர சம்பவத்தை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். “துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு, இஸ்லாமிய வாசகங்களை ஓதுமாறு என் தந்தையை பயங்கரவாதிகள் கட்டாயப்படுத்தினர். அவர் மறுத்ததால், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்,” என்று அவர் கூறினார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வழியாகப் பகிர்ந்த தகவலின்படி, “நாங்கள் பைசரான் பள்ளத்தாக்கில் இருந்தபோது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. முதலில், இது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான மோதல் என்று நினைத்தோம். ஆனால், உள்ளூர் காவல் அதிகாரிகளைப் போல சீருடை அணிந்திருந்த பயங்கரவாதிகள் எங்கள் கூடாரத்துக்கு வந்தனர்.

அதன்பிறகு தான் எனக்கு இது பயங்கரவாதிகள் தாக்குதல் என்பது எனக்கு தெரியவந்தது. பிறகு அவர்கள் முதலில் என் தந்தையை வெளியே வருமாறு அழைத்தனர்.நீங்கள் ஏன் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள்? என கேட்டனர்.  சில விஷயங்களை வைத்து கேலியும் செய்தார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றும் செய்யமாட்டோம் அவர்களை விட்டுவிடுகிறோம் என்று சொன்னார்கள். என்னுடைய தந்தையை விடவில்லை. என் தந்தையிடம் இஸ்லாமிய வாசகங்களை ஓதுமாறு கட்டாயப்படுத்தினர்.

ஆனால், என்னுடைய தந்தை நான் சொல்ல மாட்டேன் என்பது போல அதற்கு மறுத்ததால், அவரது தலை, காது மற்றும் முதுகில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர். என்னுடைய தந்தை சரிந்து கீழே விழுந்ததை நான் பார்த்தது இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. என் அருகில் இருந்த உறவினர் ஒருவரையும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்” எனவும் அந்த பெண் அங்கு நடந்த அதிர்ச்சியான சம்பவத்தை பற்றி பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தனது வீட்டில் இருந்த சீன பொருட்களை எரித்த தமிழ்  இயக்குநர்!

தனது வீட்டில் இருந்த சீன பொருட்களை எரித்த தமிழ் இயக்குநர்!

June 25, 2020
இதுதாங்க சம்பவம்! தமிழகத்தின் தலைமை நீதிபதி மாற்றம்! உத்திர பிரேதேசத்திலிருந்து வரும் புதிய நீதிபதி! பீதியில் குற்றவாளிகள்!

வள்ளலார் பெருவெளி… திமுக அரசுக்கு பேரிடியை இறக்கிய உச்சநீதிமன்றம்…. கனவிலும் எதிர்பாராத திருப்பம்..

January 23, 2025
ஆப்கானிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை! ஒருபுறம் மனித வெடிகுண்டு தாக்குதல்! மறுபுறம் பசியின் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை! ஒருபுறம் மனித வெடிகுண்டு தாக்குதல்! மறுபுறம் பசியின் தாக்குதல்!

August 27, 2021

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு என்ன என்ன ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்………

April 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x