Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பிரதமர் மோடி அதிரடி! பாகிஸ்தான் கனவிலும் எதிர்பார்க்காத செக் வைத்த இந்தியா..தலையில் அடித்து கொண்ட பாகிஸ்தான்.. மொத்தமும் போச்சு..

Oredesam by Oredesam
April 24, 2025
in இந்தியா, செய்திகள்
0
78வது சுதந்திரதின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முழுஉரை
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர வைத்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் அடைக்கலத்தில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு பயங்கரவாதிகள் அத்துமீறல் சம்பவங்களுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பது அதிர்ச்சி அளித்து வருகிறது.இந்நிலையில் அந்நாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையொட்டி நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவில் இடைவிடாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது. அதில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் என்ன நடந்து விடப் போகிறது? என்ற கேள்வி எழலாம். பாகிஸ்தானிற்கு பெரிய நெருக்கடி, ஆபத்து காத்திருக்கிறது

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சிந்து நதி நீர் பாகிஸ்தானின் உயிர்நாடிசிந்து நதி நீர்என்பது பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், அதாவது 80 சதவீத விவசாய நிலங்கள் சிந்து நதி நீரை தான் நம்பியிருக்கின்றன.சிந்து நதி நீரின் 93 சதவீதத்தை பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அரிசி, கோதுமை, கரும்பு, காட்டன் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு ஆதாரமாக திகழ்கிறது.கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய நகரங்கள் சிந்து நதியில் இருந்து நேரடியாக நீரை பெறுகின்றன.தர்பேலா, மங்க்லா ஆகிய ஹைட்ரோ பவர் பிளாண்ட்களும் தடையற்ற நீர் சேவையை சிந்து நதியில் இருந்து தான் பெற்று வருகின்றன.சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் பாகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் சிந்து நதி பயன்பாட்டால் பெறப்படுகிறது.ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் பாகிஸ்தான் தவித்து வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நதிகளில் வரும் தண்ணீரை இந்தியா முற்றிலும் பயன்படுத்த முடியாது.

குடிநீர் வினியோகம், பாசனம், நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டி இந்த மூன்று நதிகளின் நீரை சேகரிக்கக்கூடாது. இந்த நதிகளில் எந்த அளவு இந்தியா தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலம் வரை, இந்த நதிகளில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இந்தியா பயன்படுத்தி வருகிறது.

உலக வங்கி மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்திய இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1965, 1971 போர்கள், கார்கில் போர் ஆகியவற்றை கடந்தும் செயல்பாட்டில் இருந்தது. மும்பையில் 26/ 11 தாக்குதல் நடந்த நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடவில்லை. இதற்கு பாகிஸ்தானிய விவசாயிகள் பாதிக்கப்படுவர், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற மனிதாபிமான அடிப்படையே காரணம்.

ஆனால் அமைதிக்கு திரும்பி கொண்டிருக்கும் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளதன் மூலம், மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகளிலும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது.

மூன்று நதிகளிலும் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் திருப்பி விடப்படும். இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

1960ம் ஆண்டு கராச்சியில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம், 65 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் செயல்படுத்த, நிரந்தர சிந்து நதி நீர் ஆணையம் செயல்பாட்டில் உள்ளது.

ஒப்பந்தம் அமல் செய்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இரு தரப்பினரும் உலக வங்கி மேற்பார்வையிலான சர்வதேச நடுவர் மன்றத்தை அணுக முடியும். அதன்படி பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியா மீது சில முறை புகார் அளித்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

வாழ்த்து தெரிவிப்பதில் பதவி ஏற்பு உறுதிமொழியை மீறுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? சட்டப்படி நடவடிக்கை – பாஜகவின் பலே பிளான்!

November 3, 2021

மோடியின் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லும் “சூரரை போற்று” படத்திற்கு பாஜகவினர் நன்றி.

November 12, 2020
10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை! அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை! அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

October 3, 2020
Narendra Modi

ஈரோடு,விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.151 கோடிக்கு 18 தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்.

October 30, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x