ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானின் Dawn, Samma TV, Ary News உட்பட 16 ஊடகங்களின் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூ டியூப் சேனலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தடை செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு7 காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல்கள், மத உணர்வைத் தூண்டும் வகையில், தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதால் மத்திய அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களான DAWN, SAMMA TV, ARY NEWS, GEO NEWS உள்ளிட்டவைகளின் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், விளையாட்டு உள்ளிட்டவை தொடர்பானவை இந்த டிவி சேனல்கள்.
இதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. அவரது யூடியூப் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேசப் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்திய அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோயப் அக்தரின் யூ டியூப் சேனலும் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் யூடியூப்களை கணக்கெடுக்கும் பனி தீவிரமடைந்து வருகிறது
இது ஒருபுறம் என்றால் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ராணுவம் மற்றும் காவல்துறை தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். ராணுவத்தினர் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் அனுதாபிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 48 மணி நேரத்தில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட 5 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதி செயல்களிலும் ஈடுபடுவோர் அல்லது துணை செல்வோருக்கு இதே நடவடிக்கைகள் தொடரும். முக்கியமாக அனந்த்நகரில் உள்ள மோஸ்ட் வான்டட் தீவிரவாதிகள் ஆதில் தோகீர், அசீப் ஷேக் ஆகியோரின் நெட்வொர்க்கை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறோம்.
இவர்களில் ஆதில் தோகீர் நேரடியாகவே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. முக்கியமாக தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு துணை செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட களப்பணியாளர்களை சுற்றி வளைத்துள்ளோம். அப்போது பந்திப்போரா பகுதியில் தீவிரவாதிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கி சண்டையின்போது 2 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
அனந்த்நகர் முழுவதும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகளை அதிகரித்து சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். குல்காம் பகுதியில் 2 தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஶ்ரீநகரிலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறோம்.” என்றனர்.
சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானும் பதிலுக்கு ஷிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. தங்கள் நாட்டு வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. அதுபோக எல்லையிலும் அடாவடியாக அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் இந்த துப்பாக்கி சூடு நடவடிக்கைக்கு இந்தியாவும் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தினால் பாகிஸ்தானில் பெரும் பஞ்சம் ஏற்படும் அபாயம் என்று கதறும் பாகிஸ்தானிய அதிகாரிகள், இந்தியாவின் இந்த எதிர்பாராத அடியை கண்டு மிரண்டு போயுள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் ஜீலம் நதியில் திடீரென தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.
ஜீலம் நதியில் அதிக நீர் திறந்துவிட்டதாக வெளியாகும் தகவலை ஏற்கவோ, நிராகரிக்கவோ இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதேநேரத்தில் தண்ணீர் திறந்துவிடுவது என்பது வழக்கமான நடைமுறைதான் எனவும், ஜம்மு காஷ்மீரில் அதிக மழை பெய்ததால் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டதாகவும் சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உருவாகி, ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானை அடைகிறது.எனவே எல்லா வழிகளிலும் பாகிஸ்தானை சம்பவம் செய்து வருகிறது இந்தியா
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















