இந்து முன்னணி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில்,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் இந்துக்கள் மீது நடைபெற்ற கொடூர தாக்குதல் குறித்து பேசும் போது, கொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாமின் எதிர்க்கட்சியான AIUDF கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் எம்எல்ஏவான அமினுல் இஸ்லாம், இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எடுத்த நடவடிக்கையின் மூலமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெஹல்காம் தாக்குதலுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது கருத்து சுதந்திரம் அல்ல, இந்தியாவின் ஆத்மாவிற்கு எதிராக நிற்கும் செயல்.
குற்றவாளிகள் இதுபோன்ற தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இங்கே இடமில்லை,” என அசாம் முதல்வர் மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையெல்லாம் பார்த்து, படித்து தெரிந்து கொண்ட பின்னராவது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சர்வாதிகாரியாக மாறுவேன், இரும்புக்கரம் ஒடுக்குவேன் என வாயில் வடை சுடுவதை நிறுத்திவிட்டு தேசத்திற்கு எதிராக பேசுவோர்களை, முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்களை சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
சிறுபான்மை ஓட்டுக்காக பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், தேசப்பற்றுள்ள பெரும்பான்மை ஹிந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என இந்து முன்னணி எச்சரிக்கிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















