ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியர்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தியா பதிலடிபஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வணிகம் – இறக்குமதிகளுக்கு தடை, பாகிஸ்தான் நாட்டு கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
அச்சத்தில் பாகிஸ்தான்
இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. இந்தியா எந்த நேரத்திலும் தங்களை தாக்கும் என அந்த பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பீதியில் உளறி வருகிறார்கள்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. தாக்குதலை நடத்தியவர்களும், பின்னணியில் இருந்தவர்களும் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி உறுபதிபட கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருக்கும் இந்தியா, இந்த பதிலடியின் தன்மை, இலக்குகள் மற்றும் நேரத்தை நிர்ணயிப்பதில் இந்திய ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஜ்நாத் சிங், இந்தியாவை காயப்படுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது:- “உங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.பிரதமர் மோடி தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை தாக்க நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியது எனது பொறுப்பு.. பிரதமர் மோடியின் நெறிமுறை மற்றும் விடா முயற்சி பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது.அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக ராணுவம் இந்த குறுகிய தூர தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்ததசில வாரங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏவுகணைகள் எல்லைக்கு கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
ராணுவம் மொத்தம் ரூ. 260 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இக்லா-எஸ் என்பது இந்தியாவிடம் ஏற்கனவே உள்ள இக்லா ஏவுகணைகளின் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும்.இக்லா-எஸ் ஏவுகணை அதிகரிக்கும். துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பதால் பாகிஸ்தான் ராணுவம் பீதி அடைந்துள்ளது.
இது ஒருபுறம் என்றால் வரும் 7 ம் தேதி வரை குஜராத்தையொட்டிய அரபிக்கடலில் Firing Drills நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்திய கடற்படை விமானங்கள் அரபிக்கடலில் கண்காணிப்பு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் 4 நாட்கள் Firing Drills தொடங்கி உள்ளது.கடற்படையை பொறுத்தவரை Firing Drills என்பது போர் தயார் நிலைக்கான பயிற்சியாகும். இதில் வீரர்கள் தங்களின் திறமையை காட்டுவார்கள். அதேபோல் ஆயுதங்களை பயன்படுத்தி பரிசோதித்து பார்ப்பார்கள். பொதுவாக ஒரு நாட்டுடன் பதற்றம் அதிகரிக்கும் போது இந்த பயிற்சி என்பது மேற்கொள்ளப்படும். அல்லது ஆயுதங்களை பரிசோதிக்கும் வகையில் இந்த பயிற்சி என்பது மேற்கொள்ளப்படும். தற்போது பாகிஸ்தான் உடன் பதற்றம் என்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த பயிற்சி தொடங்கி உள்ளது.
அதுவும் பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு இந்த பயிற்சி தொடங்கி உள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிராக நம் கடற்படை போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நம் கடற்படை பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கண்காணிப்பு பணியை செய்து வருகிறது.
கடந்த 1ம் தேதி கிரீன் நோட்டிபிகேஷன் என்பது கடற்படை சார்பில் வழங்கப்பட்டது. அதன்பிறகு குஜராத் கடலில் Firing பயிற்சியை தொடங்கியது. இந்த பயிற்சி என்பது அரபிக்கடலில் பாகிஸ்தான் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இருந்து 85 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடந்தது. இந்த பயிற்சியில் நம் கடற்படையின் பல்வேறு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்படியான சூழலில் அரபிக்கடலில் Firing Drills தொடங்கி உள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















