தமிழக அரசியல் களம் தற்போது பா.ஜ.க அதிமுக கூட்டணி பக்கம் திரும்பியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கவனம் பெற தொடங்கி உள்ளது. தற்போது பாஜக கூட்டணி அதிமுகவுக்கு பூஸ்டாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து நம்பிக்கையாக 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக தொடங்கி உள்ளார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்கள்
அரசியல் விமர்சகர்கள் தாண்டி.. விமர்சனம் செய்யாமல் உள்ளே களத்தில் இருந்து மட்டும் பணிகளை செய்ய கூடியவர்கள் இப்படி பலர் உள்ளனர். இப்படி சிலரைத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திக்க தொடங்கி உள்ளார்கள். முதல் கட்டமாக சமீபத்தில் சமூக பின்னணி கொண்ட ஒருவரைதேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்தித்து உள்ளார்கள்
அடுத்த கட்டமாக இன்னும்20 முதல் 25 பேரை நேரடியாக, ரகசியமாக சந்திக்க உள்ளார்கள் பாஜக அதிமுக கூட்டணிக்கு தமிழக அரசியல் களம் மாறி வருகிறது. அதனை கச்சிதமாக பயன்படுத்த முடிவு செய்து களத்தில் இறங்கிவிட்டார்கள்.புஜம் இந்த சந்திப்புகள் மூலம் பாஜகவுக்கு ஆதரவாக கொண்டு வருவதற்கான மூவ்களையும் செய்து வருகிறது பாஜக
மேலும் தற்போது டெல்லி உத்தரவு படி தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து தரப்பிலும் சர்வே உத்தரவு போட்டு வருகிறதாம் . பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து இந்த சர்வேவை எடுக்க உள்ளதாம் . அதன்படி அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமல் எவ்வளவு வெற்றி வாய்ப்பு இருந்தது. பாஜக கூட்டணியோடு எவ்வளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.பாஜக மூலம் எத்தனை வாக்குகள் அதிமுகவை நோக்கி வருகின்றன என்பது குறித்து சர்வே எடுத்து வருகிறார்களாம். இதில் பாசிட்டிவான ரிப்போர்ட் வந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என பாசிட்டிவ் முடிவுகள் கூறுகிறது.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்திருப்பது அதிமுக, பாஜக என இரு கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல கட்சிகளைக் கூட்டணிக்குள் வரவைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏராளமான கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற இறுமாப்போடு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கூட்டணி உருவாவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் பிரச்சனைகளைப் பேச வேண்டிய சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் கேள்வி எழுப்பியதன் மூலம் அது வெளிச்சத்திற்கும் வந்தது.முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அமைச்சர்களும் பாஜகவுடனான கூட்டணியை மறைமுகமாக விமர்சித்த நிலையில், நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன எனப் பதில் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அமித்ஷா வருகைக்குப் பின் அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் சட்டமன்றம் மட்டுமல்லாமல் தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், கட்சி கூட்டங்கள், இல்லத் திருமண விழாக்கள் என அனைத்திலுமே அதிமுக – பாஜக கூட்டணியைப் பற்றியே முதலமைச்சர் இன்றளவும் ஒருவித பதற்ற உணர்வோடு பேசிக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் தான் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என நிர்பந்திக்க முடியுமா ? என அதிமுகவை நோக்கி முதலமைச்சர் எழுப்பிய அவருக்கே பின்னடைவை ஏற்படுத்தியது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கான எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் தற்போது அதிமுகவை நோக்கிக் கைநீட்டுவது ஏமாற்றும் செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதே கூட்டணியோடு தேர்தலைச் சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணத்தை அடியோடு சிதைக்கும் வகையில் இந்த பாஜக – அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது.
அதிமுகவை அடிமைகளைப் போல் சித்தரிப்பதும், பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது போன்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க திமுகவும் அதன் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். திமுகவினரின் முயற்சி ஒரு கட்டத்தில் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் அதிமுக – பாஜக கூட்டணியை மட்டுமே விமர்சிக்கும் அளவிற்கான பதற்றத்தை முதலமைச்சருக்கு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு என திமுக மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதிருப்தியை அறுவடை செய்யச் சரியான நேரத்தில் பாஜக – அதிமுக கூட்டணி உருவாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி இறங்கி வேலை செய்யஆரம்பித்துள்ளது இது திமுகவினரிடையே பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது . மேலும் திமுக எடுத்த சர்வேக்கள் அனைத்தும் ஸ்டாலின் அரசுக்கு எதிராகத்தான் இருந்துள்ளது. இதனால் அதிமுக பாஜக கூட்டணியை உடைத்தால் தான் இனி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் எனேவ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நோட்டிஸ்கள்ம் ,ஊடகங்கள் விவாதங்கள் மேடை தோறும் விமர்சனத்தில் இறங்கியுள்ளது திமுக .பாஜக அதிமுக தொண்டர்களை தூண்டி விடும் வேலைகளை துவங்கியுள்ளது திமுக.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















