விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாளை ஒட்டி ,கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் 7வது மாதமாக,இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஏகாம்பரம்,ராமலிங்கம், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில், திருவெண்ணெய் நல்லூர் நகரக் கழக செயலாளர் ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார்.
இதில்
கழக மருத்துவ அணி இணை செயலாளர் பொன்னரசு,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சென்னை ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவம் பார்த்தனர்.
உடன் இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட அணி,பிரிவு செயலாளர்கள் சதீஷ் பாண்டியன், கிருபானந்தன், உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் குமரகுரு அவர்கள் அன்னதானம் வழங்கினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















