கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது முடியனுர் கிராமம். இந்த கிராமத்தில் எல்லை பகுதியில் சாலையின் நடுவே உடம்பில் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அவளியாக சென்ற பேருந்தை வழிமறித்து படுத்துள்ளார்.
இதனை அடுத்து, பேருந்தில் வந்தவர்கள் அருகாமையில் உள்ள போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த நபர் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சேரன் என்பதும் அவரை கண்மூடித்தனமாக கை கால் தலை தோள்பட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு தப்பி சென்றது அவர்களது நண்பர்கள் வைரவன், கணேசன் என்பதையும் தெரிவித்துள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேரனை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சேரனை வெட்டியது அவர்களது நண்பர்களான வைரவன் மற்றும் கணேசன் என்றும், அவர்களிடம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஆனது என்பதும் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர், நண்பர்கள் இருவரும் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில், மீண்டும் வந்து அவர்கள் சேரனை கொலை செய்யும் நோக்கோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வைரவன் மற்றும் கணேசன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














