விழுப்புரம் மாவட்டம்,மேல்மையனூர் அடுத்துள்ள,துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்,இவர் இறந்துவிட்டார்.இவருக்கு இரண்டு மனைவியர்.
முதல் மனைவி பெயர் விருத்தாம்பாள், 50;இவர் திண்டிவனம் அடுத்துள்ள,நடுவானந்தல் கிராமத்தில் வசிக்கிறார். வரது மகன்கள் பாலகுரு, 28, பிரகாஷ்ராஜ், 25.
பழனிவேலின் இரண்டாவது மனைவி ஜெயக்கொடி, 45; துறிஞ்சிப்பூண்டியில் வசிக்கும் இவருக்கு பூபாலன், 19, என்ற மகனும், புவனா, 17, என்ற மகளும் உள்ளனர். பழனிவேலுக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை பிரிப்பதில், இவர்களுக்குள் தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவுமுதல் ஜெயக்கொடியை காணவில்லை.
இதனை அடுத்து,வளத்தி போலீசார் மற்றும் மேல்மலையனுார் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் தேடியதில், ஜெயக்கொடி உடல் கிடைத்தது.விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயக்கொடியை சொத்துக்காக பிரகாஷ்ராஜ் தடியால் தலையில் அடித்து கொலை செய்து, உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரிந்தது.இதனை அடுத்து,வளத்தி போலீசார் பிரகாஷ்ராஜை கைது செய்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















