உலகத்தை புரட்டி போட்டு வரும் கொரோன வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவிலை . கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகி வருகின்றார்கள். இந்த நிலையில் இந்தியாவை அதிரவைத்த சம்பவம் டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடைபெற்ற மத வழிபாடு தான் . இங்கு வெளிநாட்டில் இருந்து வந்து மத பிரச்சாரத்திற்கு ஆலோசனை கூட்டம் தவ்கித் ஜமாத் என்ற இசுலாமிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது இதற்கு தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு நடந்த மாநாட்டில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாடு சட்டவிரோதமாக நடந்துள்ளது. வெளி நாட்டில் இருந்து வந்த மதகுருக்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் சோதனை செய்ய இந்திய சுகாதார துறை இறங்கியுள்ளது இந்த மாநாட்டின் மூலம், கொரோனா பெருமளவில் பரவியது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.
இது குறித்த முக்கிய அம்சங்கள்
- தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு சார்பில், மார்ச் 1 முதல் 15 வரை நடந்த மதரீதியிலான மாநாட்டில், இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- தபிலீகி ஜமாத் தலைமையகத்தில் இருந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 24 பேருக்கு கொரோனா இருந்தது கடந்த ஞாயிறு அன்றே தெரியவந்தது.
- இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என திங்கள் இரவு அன்று சோதனை செய்யப்பட்டது. சுமார் 100 பேரிடம் நடந்த சோதனை முடிவுகள், இன்று(மார்ச் 31) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த மாநாட்டில் பங்கேற்ற 7 பேர், கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உயிரிழந்தனர். மற்றொருவர் ஸ்ரீநகரில் உயிரிழந்தார்.
- மாநாட்டில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரும், 6 மாடிகள் கொண்ட மையத்தில் தங்கியிருந்தனர். அதில்,250க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர். அனைவரும், ஒரே உணவருந்தும் அறையை பயன்படுத்தினர். உணவும் ஒரே அறையில் தயாரிக்கப்பட்டது.
- இதனையடுத்து, நிகழ்ச்சி நடந்த டில்லி தெற்கு சுற்றுவட்டார பகுதிகளுக்கு போலீசார் சீல் வைக்கப்பட்டது. டில்லி போலீஸ், சி.ஆர்.பி.எப்., போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.
- இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், பீஹார், தெலுங்கானா, ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக காஷ்மீரில் முதலில் உயிரிழந்தவர், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்.
- இந்த மசூதியின் ஒரு சுவர் நிஜாமுதின் போலீஸ் ஸ்டேசனுடன் இணைந்துள்ளது. 25 ஆயிரம் பேர் வசிக்கும் பஸ்டி நிஜாமுதீன் பகுதியுடன் இணைந்து இந்த மசூதி உள்ளது.
- கடந்த 2 முதல், மசூதி வாசலில் பணியில் உள்ள போலீசார், அந்த பகுதியில் மக்கள் கூடுவதை தடுத்துள்ளனர். மார்ச் 22 வரை வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தவர் இந்த மசூதிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 22க்கு பிறகு யாரையும் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
- டில்லி கூடுதல் கமிஷனர் தேவேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், நிஜாமுதீன் பகுதி மக்களையும், மசூதிக்குள் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து, தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் சுகாதார அமைப்புக்கு போலீசார் உதவி வருவதாக தெரிவித்தார்.
நன்றி: தினமலர்