பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசிய காணொளி ஒன்றை இன்று காலை 9 மணி அளவில் வெளியிட்டார். அதில், அவர் பேசியதாவது :
ஊரடங்கின் 10 ஆவது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். இதில் மக்களுக்கு பெரும்பங்கு உள்ளது. சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கிவரும் மக்களுக்கு நன்றி.
நாம் தனித்து இருக்கிறோமே ஒழிய தனியாக இல்லை.
கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளில் உலகிற்கு இந்தியா ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளது.
கொரோனாவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும்
வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் நான்கு மூளைகளிலும் டார்ச், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்.
நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன் இணைந்துள்ளோம்.
வீடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களில், சிலருக்க நாம் எப்படி கொரோனாவுக்கு எதிராக தனியாக போராட முடியும் என நினைக்கலாம். அது போன்ற கேள்வி அவர்களின் மனதில் எழும்? ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்துள்ளோம். கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மார்ச் 22 அன்று, மக்கள் செலுத்திய நன்றியை, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக அதனை பின்பற்றுகின்றன. மக்கள் ஊரடங்கு, மணியோசை எழுப்பியதன் மூலம், சவாலான நேரத்தில் நாடு ஒற்றுமையாக உள்ளதை உணர்த்தியது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரசை பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.