இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடித்து வருகிறது. தெலுங்கனாவில் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. உத்தரவை மீறினால் சுட பிடிக்கும் உத்தரவு போடப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில், தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை காவல் துறையினர் பிடித்து வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் லாலாபட் அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவல் துறையியினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தில் பெண் தனது மகன், மற்றொருவர் என மூன்று பேர் வந்துள்ளார்கள்.
அவர்களை மடக்கிய காவல்துறை தேசிய ஊடரங்கை மீறியதற்காக வழக்குப்பதிந்து அபராதம் வசூலித்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த பெண், பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் சட்டை பிடித்து இழுத்து தகராறு செய்தார். சக போலீசார் முன்னிலையில் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்த இழுத்து வாக்குவாதம் செய்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















