உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோன இந்தியாவை விட்டு வைக்கவில்லை. உலகம் முழுவதும் 1 லட்சம் பேரை பலி கொண்டு அகோரா முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை 6700 பேருக்கு கொரோனா பாதிப்பும் 236 பேர் உயிர் இழந்துள்ளார்கள், இந்தியாவை பொறுத்தவரை 63% இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களால் தான் கொரோனா பரவி உள்ளது. என்ற தகவல்கள் வந்துள்ளது.
இந்த நிலையில் கொரோன வைரஸ் இந்தியா முழுவதும் பரவ காரணமாக இருந்த டில்லியில் நடந்த தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இறங்கின. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்யும்படியும் கேட்டுகொள்ளப்பட்டனர்
இந்த நிலையில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த காங்கிரஸ் முன்னாள் வார்டு உறுப்பினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை விசாரித்த போது டில்லி மாநாட்டில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. தீவிரமாக விசாரித்த போது காவலர்களிடம் அவர் உண்மையை மறைத்துள்ளார். தற்போது அதிக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
அவரது மனைவி மற்றும் மகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டில்லியில் உள்ள தீன்பூர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் வசித்த பகுதியில் இருந்த 25 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை நடைபெறுகின்றது.
தொழில்நுட்ப அடிப்படையில் டில்லி போலீசார் இவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதித்துள்ள 22 இடங்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவர்களின் தொடர்புகளை கண்டறிய 10 ஆயிரம் மொபைல்களை டிரேஸ் செய்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















