திருவள்ளுர் மேற்கு மாவட்டத்தின் துணைத்தலைவராகவும் ஒன்றிய கவுன்சிலராகவும் இருப்பவர் வி. சண்முகம் கடந்த 12 ஆம் தேதி இவரின் நண்பர் மருத்துவமனை அவரது மனைவியுடன் சென்றுவிட்டு வரும் வழியில் திருவள்ளூர் தாலுகா, B2 போலீஸ் ஸ்டேஷன் காவல் உதவி ஆய்வாளர், கணேச சுந்தரம் நண்பரை வழி மறித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்கள். பாஜக ஒன்றிய கவுன்சிலர் சண்முகத்திற்கு அவசர தேவைக்காக இருசக்கர வாகனம் தேவைப்ட்டுள்ளது.

அப்போது நண்பரை தொடர்பு கொண்ட போது அவர் நடந்ததை விவரித்துள்ளார். பின் திருவள்ளுவர் தாலுகா அலுவலகம் அருகே நான் சென்று நடந்தவற்றை எடுத்து கூறியுள்ளார். மருத்துவமனைக்கு தானே சென்று வந்துள்ளார்கள் என பேசும் போது B2 போலீஸ் ஸ்டேஷன் காவல் உதவி ஆய்வாளர் பாஜக ஓன்றிய கவுன்சிலர் சண்முகத்தினை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார், இது குறித்து பாஜக கவுன்சிலர் ,

B2 போலீஸ் ஸ்டேஷன் காவல் ஆய்வாளரிடம் கணேச சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















