கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் வருகிறது .ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 14 ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது கொரோனா தொற்றை தொடர்ந்து கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்யசேது செயலியை அவனைவரும் பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து உலகில் இதுவரையில் இல்லாத வகையில் ஆரோக்யசேது செயலி 13 நாட்களில் 50 மில்லியன் பதிவிறக்கங்களை எட்டி உள்ளது. மேலும் உலகின் அதிவேக பயன்பாடாக மாறி உள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: 50 மில்லியன் பயனாளர்களை சென்றடைய டெலிபோனுக்கு 75 ஆண்டுகள், டி.வி.,க்கு 13 ஆண்டுகள் இணையத்திற்கு 4 ஆண்டுகள் பேஸ்புக்கிற்கு 19 மாதங்கள், ஆனால் ஆரோக்கிய சேது செயலி 13 நாட்களிலேயே 50 மில்லியன் பயனாளர்களை எட்டி உள்ளது. இது தற்போது ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
உலகத்தை பொறுத்த வரையில் இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு கொரோனவை எதிர்த்து போராடுவதையும் அதை கட்டுக்குள் வைத்திருப்பதையும் கண்டு வியப்பில் உள்ளன. டிஜிட்டல் முறையிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என நிரூபித்து வருகிறது இந்தியா என உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது