உலகத்தினை ஆட்டி படைத்தது வரும் கொரோனவால் உலகமே வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்தை பொறுத்தவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு என உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கண்கானித்து வருகின்றார்கள் . இன்று வரை 13ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 420 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பல குறும்படங்கள் விளம்பரங்கள் என பல்வேறு விதமாக மக்களுக்கு விழிப்புணர்வு பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிறுவர்கள் கூடி ஒரு கொரோன குறித்து விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது அந்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
கொரோனா தெற்று எப்படி பரவும் என்பதை விளக்கும் அந்த வீடியோ அருமையாக இருந்தது. சங்கிலி தொடரை எப்படி உடைப்பது என்பது போல் அமைந்தது . செங்கற்களை சரிய விட்டு சிறுவர்கள் விளக்கியுள்ளனர். அதில் ஒரு காட்சியில் செங்கற்களை சரிய விடும்போது அனைத்து செங்கற்களும் விழுந்துவிடுகிறது. இதில் எப்படி கொரோனா வைரஸ் பரவுகிறது என்று காட்டி உள்ளனர். அதை எப்படி சரியாய் விடாமல் தடுப்பது என இன்னொரு காட்சியில் சரிந்து விழும் செங்கற்கள் மத்தியில் ஒரு செங்கலை எடுத்து விட்டு பரவலை எப்படி தடுப்பது என்று சிறார்கள் விளக்கி உள்ளனர், இதை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது மிகப் பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து இருப்பதகா பாராட்டும் தெரிவித்துள்ளார்.