பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன் பாரதீய ஜனதா கட்சியின் அமைப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது யாருக்காவது தெரியுமா? கட்சி அமைப்பை நடத்திச் செல்வதிலும், கட்சித் தொண்டர்களை அணுகுவதிலும் மிகவும் திறமையாகச் செயலாற்றியது அவரை கட்சியின் காரிய கர்த்தாவாக அவரை உயர்த்தியது.
நரேந்திர மோடி 1987 ஆம் ஆண்டு பா.ஜ. கட்சியில் சேர்ந்தார். குஜராத்தில் அகமதாபாத் உள்ளாட்சிக்கு 1987-ல் நடந்த தேர்தலில் அவரது தலைமையிலான உற்சாகமான பிரசாரத்தால், பா.ஜ.க. வெற்றி பெற்றது.
1990ம் ஆண்டு, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியின் உத்தியை வகுத்த மையக் குழுவில் முக்கியப் பங்காற்றினார். அதன் பலனாக, குஜராத்தில் பத்தாண்டுகள் இருந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1980ம் ஆண்டில் பா.ஜ.க. 141 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. அடுத்து, 1985ல் நடந்த தேர்தலில் 149 இடங்களில் வென்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி 33 இடங்களில்தான் வென்றது. அதையடுத்து, 67 இடங்களில் வென்ற பா.ஜ.க. சிமன் பாய் படேலுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றது. ஆனால், கூட்டணி முறிந்துவிட்டாலும், குஜராத்தில் பா.ஜ.க. தனிப்பெரும் சக்தியாக உருப்பெற்றது.
அதையடுத்து, நரேந்திர மோடி 1995ம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது 182 இடங்களில் முதன்முறையாக 182 இடங்களில் போட்டியிட்டு வென்று ஆட்சி பிடித்தது.
1996ம் ஆண்டில் கட்சியின் தேசிய செயலராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். அதையடுத்து, பஞ்சாப், அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய வடமாநிலங்களில் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
அப்போது, பா.ஜ.க. இமாசலப் பிரதேசத்தில் 1998ல் கூட்டணியின்றி ஆட்சியமைத்தது.
1996ல் ஹரியானா, 1997ல் பஞ்சாப், பின்னர் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி அமைத்தது.
தில்லியில் கட்சிப் பணியில் ஈடுபட்டபோது, சர்தார் பிரகாஷ் சிங் பாதல், பன்சிலால், பரூக் அப்துல்லா ஆகிய பெரிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.
பா.ஜ. கட்சியில் சுந்தர் சிங் பண்டாரி, குஷபாவ் தாக்கரே ஆகிய மூத்த தலைவர்கள் வகித்த மிகப் பெரிய பொறுப்பான பொதுச் செயலாளர் (அமைப்பு) பதவி நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டது.
அப்போது, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல் பிரசாரங்களில் மோடி மிக முக்கிய பங்கு வகித்தார்.
இரு தேர்தல்களையும் அடுத்து பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து, வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.
கட்சிப் பணிகளில் நரேந்திர மோடி ஈடுபட்டபோது, இளம் தலைவர்களை உருவாக்கினார். அத்துடன், பிரசாரப் பணிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தி வந்தார்.
இத்தகைய பணிகள் நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே உறுப்பினர்களைக் கொண்ட பாரதீய ஜனதா கட்சி மத்தியில் முழு பலத்துடன் 1998ம் ஆண்டு முதல் 2004 ஆண்டு வரை நிறைவான ஆட்சிகளைத் தர உதவின.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















