ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, “வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்,” என்றார்.