கொரானாவினால் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்துஅடுத்து என்ன என்று செய்யப்போகிறோம் என்று கவலையில் இருக்கும் பொழுது இந்தியாவை நோக்கி தான் முன்னேறிய நாடுகளின் நிறுவனங்கள் ஓடி வரஆரம்பித்து இருக்கின்றன.இதை கணித்த சீனா இந்தியவின் முக்கிய பங்குகளை வாங்க ஆரம்பித்தது. இதை தடுக்க மத்திய அரசு ஒரு அவரச திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியவில் முதலீடு செய்ய வேண்டுமானால் முதலில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று. இதனால் அதிர்ந்த சீனா இந்த சட்டத்தில் திருத்தம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கியமான காரணம் சீனாவின் வீழ்ச்சி தான். இந்த நூற்றாண்டு இனி இந்தியாவின் நூற்றாண்டு தான் என்று உலகமே ஏற்றுக் கொண்டு இந்தியாவைதேடி வருகின்றன.இந்தியாவில் 260 மில்லியன் அக்கவுண்ட்களையும் உலகளவில் 2500 மில்லியன் அக்கவுண்ட்களையும் கொண்டு சோசியல் மீடியா நிறுவனங்களில் நம்பர் 1 ஆக இருக்கும் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறது.
மைக்ரோ சாப்ட், ஆப்பிள், அமேசான், ஆல் பபெட் நிறுவனங்களை அடுத்து உலகின்மிகப்பெரிய நிறுவனம் பேஸ்புக் நிறுவனம் தான்.சுமார் 550 பில்லியன் மதிப்பில் சொத்துக்களை வைத்துள்ளது.இந்த பேஸ் புக் நிறுவனம் இந்தியாவில் சுமார் 380 மில்லியன் மொபைல் வாடிக் கையாளர்களை கொண்டு இந்தியாவில் நம்பர்-1 டெலிகாம் நிறுவ ஆக உள்ள ஜி யோவில் சுமார் 43 ஆயிரத்து 574 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
இதன் மூலமாக ஜியோவின் சந்தை மதிப்பு உயரும். அதோடு இந்தியாவில் உள்ளசுமார் 60 மில்லியன் சிறிய வியாபாரிகளும் பயன் பெறுவதற்கு உதவியாக இருக்கும்பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய முதலீடு உலகளவில் இந்தியபொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும் என்ப தால் பல நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி ஒடி வர வழி வகுக்கும்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் அடுத்த ஆண்டு பொருளாதாரம் என்பது விஞ்சியதாக இருக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் உலக வல்லுநர்கள் கணித்துள்ளார்கள். சீனாவை முழுவதுமாக புறக்கணிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் முதலீடுகளை திரும்ப பெற்று வருகிறது என்பது குறிப்பிட தக்கது.