இந்தியாவில் கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு”க்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான கணிசமான முதலீடுகளை ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி மூன்று கட்டங்களாக உபயோகப்படுத்தப்படும். உடனடி கோவிட்-19 அவசரகால நடவடிக்கைக்காக ரூ.7,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகை நடுத்தரக்கால ஆதரவுக்கு (1-4 ஆண்டுகள்) பணி பயன்முறை அணுகு முறையின் கீழ் வழங்கப்படும்.
நோய் கண்டறிதல் மற்றும் பிரத்யேக கோவிட் சிகிச்சை வசதிகள் மூலம் கோவிட்-19 பரவலை மெதுவாக்கி கட்டுப்படுத்த அதிகரிக்கப்பட்ட அவசரகால நடவடிக்கை, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை மையப்படுத்தப்பட்ட முறையில் வாங்குதல், எதிர்கால நோய் பரவல்கள் தடுப்பு மற்றும் தயார்நிலைக்கு உதவ நெகிழ்வுத்தன்மை உடைய தேசிய மற்றும் மாநில சுகாதார அமைப்புகளை நிறுவதல், ஆய்வகங்களை அமைத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல், உயிரி பாதுகாப்பு தயார்நிலை, பெரும்தொற்று ஆராய்ச்சி மற்றும் சமூகங்களை திறம்பட பங்கேற்க செய்து ஆபத்து தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை இந்த தொகுப்பின் முக்கிய நோக்கங்களாகும். இந்த இடையீடுகளும் முயற்சிகளும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் மட்டுமே செயல்படுத்தப்படும்.
முதல் கட்டத்தில், தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களின் ஆதரவோடு இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது:
i) ஏற்கனவே உள்ள சுகாதார வசதிகளை, பிரத்யேக கோவிட் மருத்துவமனைகள், பிரத்யேக கோவிட் சுகாதார மையங்கள் மற்றும் பிரத்யேக கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்ற ரூ.3,000 கோடி கூடுதல் நிதி, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு தொகுப்பின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காப்பு, தனிமைப்படுத்துதல், பரிசோதனை, சிகிச்சை, நோய் தடுப்பு, தூய்மைப்படுத்தல், சமூக இடைவெளி மற்றும் கண்காணிப்பு குறித்த வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நோய் பரவல் அதிகமாக உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ii) நோய் கண்டறியும் ஆய்வகங்களின் வலைப்பின்னல் விரிவுப்படுத்தப்பட்டு, நமது பரிசோதனை திறன் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே இருக்கும் பல-நோய் பரிசோதனை தளங்களை பயன்படுத்தி, கோவிட்-19 பரிசோதனைக்காக 13 லட்சம் பரிசோதனைக் கருவிகளை வாங்குவதற்கான உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன.
iii) ‘பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டம்: கோவிட்-19 தொற்று எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில்’ சமுக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். தனிநபர் பாதுகாப்பு உபகரணம், எண்95 முகக்கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் மையப்படுத்தப்பட்ட முறையில் வாங்கப்படுகின்றன.
வலுவான அவசரகால நவடிக்கையை அதிகப்படுத்துதல், தேசிய மற்றும் மாநில சுகாதார அமைப்புகளின் பலப்படுத்துதலை தொடர்ந்து பெரும்தொற்று ஆய்வு மற்றும் ஒரே சுகாதாரத்துக்காக பல்துறை தேசிய நிறுவனங்கள் மற்றும் தளங்களை வலுப்படுத்துதல், சமூக செயல்பாடு, ஆபத்து பற்றிய தொடர்புகள் மற்றும் நடைமுறைப்படுத்துதல், மேலாண்மை, திறன் கட்டமைத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கூறு ஆகியவற்றுக்காக இந்த செலவுத் தொகையின் பெரும் பங்கு பயன்படுத்தப்படும். அவ்வப்போது எழும் அவசர நிலைமைக்கேற்ப, பல்வேறு நடைமுறைப்படுத்தும் முகமைகளுக்கிடையே (தேசிய சுகாதார ஆணையம், மத்திய கொள்முதல், ரயில்வே, சுகாதார ஆராய்ச்சி துறை/இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, தேசிய நோய் தடுப்பு மையம்) இந்த தொகுப்பின் கூறுகளை ஆராய்ந்து நிதியை உரிய வகையில் மறுஒதுக்கீடு செய்ய சுகாதாரம் குடும்ப நல அமைச்சகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















