Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

Oredesam by Oredesam
April 27, 2020
in செய்திகள், தமிழகம்
0
நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !
FacebookTwitterWhatsappTelegram

கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ தமிழர் போரை நிறுத்திய தினம் இன்று !

உண்ணாவிரததத்தின் ஒரு நாடகத்தின் 11-ம் ஆண்டு நினைவு நாள்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்தது மறைந்த கருணாநிதி. திமுவின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி தேசியத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. இந்தநிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி 2009 ம்ஆண்டு ஒரு மிகப்பெரிய நாடகத்தை நடத்தியது திமுக. அந்த நாடகத்தின் கதாநாயகன் கலைஞர் கருணாநிதி . அவர் மனைவி மற்றும் தனது துணைவியாருடன் 3 மணி நேர உண்ணாவிரதம். இருந்து ஈழ போரை வென்று காட்டினார் என திமுக சொல்லிவருகிறது

ஈழ மண்ணில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு எதிராக, ‘இந்திய அரசே போர் நிறுத்தம் செய்ய அழுத்தம்கொடு-நடவடிக்கை எடு’ என்று தமிழகமே போராடியது. ஆமாம் கண் பார்வையற்ற, உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் வரையிலும் வீதியில் வந்து போராடினார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும், முதல்வர் பதவி என்பது அதிகாரமற்றதுதானே என்று கலைஞரின் ‘நிலைய வித்துவான்கள்’ ஒத்து ஊதி பாடினார்கள்.சரி, அந்த அதிகாரமில்லா பதவிக்கு ஏனப்பா, தந்தை பெரியாரை நடுத்தெருவில் விட்டுவிட்டு, ‘பதவி என்ற அதிகாரத்தை பிடித்தால்தான் எதையும் செய்ய முடியும்’ என்று கூறி வெளியேறினீர் கள், என்றால் பதில் இல்லை.

அந்த அதிகாரமில்லா பதவி எதற்கு, ‘என் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. தடுத்து நிறுத்த முடியா என் முதல்வர் பதவி எதற்கு’ என்று தூக்கி எறிந்துவிட்டு வரமுடியவில்லை. மன்மோகன் சிங்கும்- சோனியாவும் சேர்ந்து கழுத்துக்கு குறுக்காக 2ஜி ஊழல் முறைகேடு என்ற கத்தியை அழுத்தி வைத்து விட்டிருந்தார்கள்.

கலைஞர், அந்த கத்தியை இழுத்துப் பிடித்தபடியேதான் 27.மார்ச்சு 2009 அன்று காலை, மெரினா கடற்கரையில் போய் உண்ணாவிரதம் என படுத்துக்கொண்டார். உலகிலேயே இந்த தினுசில், போராட்டம் நடத்திய ஒரு தலைவரை பார்த்திருக்கவே முடியாது. அதுவும் சில மணித்துளிகள்தான்.

கலைஞரின் உண்ணாவிரதப் போராட்டம் கண்டு நடுங்கிய!!! இலங்கை அதிபர் ராஜபக்சே ‘போர் நிறுத்தம் செய்வதாக’ ஒப்புக்கொண்டுவிட்டார் என்று மத்திய அமைச்சரும், குடியரசுத் தலைவர் பிரணாப்பும் கூறினார்களாம். அப்படிச் சொல்லி மகிழ்ந்து, பழரசம் பருகி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்.

ஆக, 2ஜி விஷயத்தில் மத்திய அரசை மிரட்டின மாதிரியும் ஆயிற்று. கட்சிக்காரர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இலங்கைத் தமிழர்களுக்கு குரலும் கொடுத்த மாதிரியும் ஆயிற்று, என்று கலைஞர் சாமார்த்தியமாக ஆடிய நாடகம் அது என்று அப்போது யாருக்கும் தெரியாது. அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு. ஆட்ட மேய்ச்ச மாதிரியும் ஆச்சு என்கிற மாதிரி.

பிறகென்ன?

“இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாளில் விடுதலையைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு” என்று போஸ்ட்டர்கூட அடித்து ஒட்டிக்கொண்டார்கள். உலகிலேயே இப்படி ஒரு சமாதானப் புறாவை பார்த்திருக்க முடியாது.

தொடர்ந்து எத்தனை நாடகங்கள்?

உச்சகட்டமாக, திமுகவும்- காங்கிரஸ் கட்சியுமே மக்களோடு மக்களாக நின்று கொண்டு, ‘இந்திய அரசே-இலங்கையில் போர் நிறுத்தம் செய்’ என்று ‘போராடியதுதான்’ வேடிக்கையிலும் வேடிக்கை.

ஆனாலும் அங்கே 2009 மே- மாதம். திட்டமிட்டபடி தமிழின அழிப்பை நடத்தி முடித்துவிட்டான் மகிந்த ராஜபக்சே. இந்த பக்கம் மக்களோடு மக்களாக போராடுவதைப் போலவே நாடகமாடி 2009 மக்களைவை தேர்தலிலும் வெற்றி பெற்றது திமுக-காங் கூட்டணி.

அதன் பிறகு கோத்தபயா ராஜபக்சே கொடுத்த பேட்டிதான் முக்கியம்.இந்தியாவிற்கான போரைத்தான் நாங்கள் நடத்தினோம். சேர்ந்தேதான் நடத்தினோம். ஒவ்வொரு நகர்வும் இந்தியாவுக்கு கூறப்பட்டது. ஆலோசனை பெறப்பட்டது. இந்தியாவை விட எங்களுக்கு தமிழகத்தின் மீதுதான் ஒரு அச்சம் இருந்தது. அங்கே பெரியதாக ஏதும் போராட்டம் வெடித்து, அது இந்திய அரசுக்கு அழுத்தமாக மாறி- எங்களை போர் நிறுத்தம் செய்ய நிர்பந்தித்துவிடக்கூடாதே என கவனமாக இருந்தோம்.” என்றான்.

தமிழினத்திற்காக கலைஞர் போராடிய விதம் பற்றி ராஜபக்சே வகையறா கொடுத்த துரோகச் சான்று இப்படித்தான் இருந்தது.2014-ல் அடுத்த மக்களவைத் தேர்தல் வந்தது. தொடர்ந்து, மத்திய மந்திரி பதவியில் இருந்த திமுக கடைசி கட்டத்தில் விலகி வெளியே வந்தது. ‘கூடா நட்பு கேடாய் முடிந்தது’ என்று, காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் கலைஞர். அண்ணா அறிவாலயத்தில் உடன் பிறப்புகள் எல்லாம் தாறுமாறா பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள்.

மறுபக்கம், காங்.கட்சி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘நாங்கள் தேவை யில்லாமல் முதுகில் தூக்கிச் சுமந்த அழுக்கு மூட்டை திமுக. இறக்கிப் போட்டுவிட்டோம். சுமையில்லாமல் நடக்கின்றோம்’ என்று பதிலுக்குத் துப்பினார்.

அப்போதுதான் கலைஞர், ‘இலங்கைப் போர் விஷயத்தில் நாங்கள் காங்.கட்சியை நம்பினோம். அவர்கள் துரோகம் செய்தார்கள்’ என பல விஷயங்களை போட்டு உடைத்தார். கலைஞர் உண்ணாவிரதம் இருந்த போது ப.சிதம்பரம்தான் ‘போர் நிறுத்தப்பட்டுவிட்டது’ என பொய்சொன்னார் என உடன் பிறப்புகள் பேசிக்கொண்டார்கள்.

காலம் எவ்வளவு கொடியது பாருங்கள். விக்கிரமாதித்தியன் தோளில் இருந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, மோடி ஆட்சி செய்த கெடுநேரம் இப்போது, ‘திமுக- என்ற அழுக்கு மூட்டையை’ காங்கிரஸ் கட்சி மீண்டும் முதுகில் சுமக்கத் தொடங்கியுள்ளது.

இல்லை என்றால் பாஜக உள்ளே வந்துவிடும் அல்லவா என்ற சாமானியனும், அந்த, ‘அழுக்கு மூட்டைகளின்’ பச்சைத் துரோகத்தை மறக்க வேண்டியதாயிற்று.இல்லை என்றால் மறந்துபோகக்கூடிய துரோகமா அது.?

இந்த ‘அழுக்கு மூட்டைகளின்’ ஒத்து ஊதும் ஊடக நண்பர்கள்தான் இப்போது, ‘சீமான் போன்ற தமிழ் தேசியம் கும்பல்தான்’ ஈழப்போராட்டத்தைக் கலைத்தது என்று ஆங்காங்கே கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த காலகட்டத்தில், சீமான் உள்ளிட்ட தமிழ தேசிய ‘கும்பல்கள்’ எல்லாம் களத்திலேயே இல்லை. பிறக்கவும் இல்லை என்று அறியாமலேயே பொய் உரைத்து நிற்கிறார்கள்.

காலம், ‘அழுக்கு மூட்டைகளை‘ வெளுத்து துவைத்து போடாமல் விடாதா என்ன?

பா.ஏகலைவன்- பத்திரிகையாளர்.

Share2439TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

MODI!

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026

யாரால் தோற்றார் அண்ணாமலை ?

May 4, 2021
Narendra Modi

பராம்பரிய திறமைகளுக்கு சுதந்திர தினத்தில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!..

August 15, 2023
Annamalai

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x