Sri Lakshmi Narasimmar 108 Potri :
ஓம் திருக்கடிகைத் தேவாபோற்றி
ஓம் திருமாமகள் கேள்வாபோற்றி
ஓம் யோக நரசிங்காபோற்றி
ஓம் ஆழியங்கையாபோற்றி
ஓம் அக்காரக் கனியேபோற்றி
ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்போற்றி
ஓம் எக்காலத்தும் எந்தாய்போற்றி
ஓம் எழில் தோள் எம்மிராமாபோற்றி
ஓம் சங்கரப்ரியனேபோற்றி
ஓம் சார்ங்க விற்கையாபோற்றி
ஓம் உலகமுண்ட வாயாபோற்றி
ஓம் உவப்பில் கீர்த்தியம்மாபோற்றி
ஓம் அடியவர்க்கருள்வாய்போற்றி
ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
ஓம் தாமரைக் கண்ணாபோற்றி
ஓம் காமனைப் பயந்தாய்போற்றி
ஓம் ஊழி முதல்வாபோற்றி
ஓம் ஒளி மணிவண்ணனேபோற்றி
ஓம் ராவணாந்தகனேபோற்றி
ஓம் இலங்கை எரித்த பிரான்போற்றி
ஓம் பெற்ற மாளியேபோற்றி
ஓம் பேரில் மணாளாபோற்றி
ஓம் செல்வ நாரணாபோற்றி
ஓம் திருக்குறளாபோற்றி
ஓம் இளங்குமாரபோற்றி
ஓம் விளக்கொளியேபோற்றி
ஓம் சிந்தனைக்கினியாய்போற்றி
ஓம் வந்தெனை ஆண்டாய்போற்றி
ஓம் எங்கள் பெருமான்போற்றி
ஓம் இமையோர் தலைவாபோற்றி
ஓம் சங்கு சக்கரத்தாய்போற்றி
ஓம் மங்கை மன்னன் மனத்தாய்போற்றி
ஓம் வேதியர் வாழ்வேபோற்றி
ஓம் வேங்கடத்துறைவாபோற்றி
ஓம் நந்தா விளக்கேபோற்றி
ஓம் நால் தோளமுதேபோற்றி
ஓம் ஆயர்தம் கொழுந்தேபோற்றி
ஓம் ஆழ்வார்களுயிரேபோற்றி
ஓம் நாமம் ஆயிரம் உடையாய்போற்றி
ஓம் வாமதேவனுக்கு அருளினாய்போற்றி
ஓம் மூவா முதல்வாபோற்றி
ஓம் தேவாதி தேவாபோற்றி
ஓம் எட்டெழுத்திறைவாபோற்றி
ஓம் எழில்ஞானச் சுடரேபோற்றி
ஓம் வரவரமுனி வாழ்வேபோற்றி
ஓம் வட திருவரங்காபோற்றி
ஓம் ஏனம்முன் ஆனாய்போற்றி
ஓம் தானவன் ஆகம் கீண்டாய்போற்றி
ஓம் கஞ்சனைக் கடிந்தாய்போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய்போற்றி
ஓம் மாலேபோற்றி
ஓம் மாயப் பெருமானேபோற்றி
ஓம் ஆலிலைத் துயின்றாய்போற்றி
ஓம் அருள்மாரி புகழேபோற்றி
ஓம் விண் மீதிருப்பாய்போற்றி
ஓம் மண்மீது உழல்வோய்போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய்போற்றி
ஓம் மாகடல் சேர்ப்பாய்போற்றி
ஓம் முந்நீர் வண்ணாபோற்றி
ஓம் முழுதும் கரந்துறைவாய்போற்றி
ஓம் கொற்றப் புள்ளுடையாய்போற்றி
ஓம் முற்ற இம் மண்ணளந்தாய்போற்றி
ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
ஓம் அரவிந்த லோசனபோற்றி
ஓம் மந்திரப் பொருளேபோற்றி
ஓம் இந்திரனுக்கருள்வாய்போற்றி
ஓம் குரு பரம்பரை முதலேபோற்றி
ஓம் விகனைசர் தொழும் தேவாபோற்றி
ஓம் பின்னை மணாளாபோற்றி
ஓம் என்னையாளுடையாய்போற்றி
ஓம் நலம்தரும் சொல்லேபோற்றி
ஓம் நாரண நம்பிபோற்றி
ஓம் பிரகலாதப்ரியனேபோற்றி
ஓம் பிறவிப் பிணியறுப்பாய்போற்றி
ஓம் பேயார் கண்ட திருவேபோற்றி
ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளேபோற்றி
ஓம் ஏமகூட விமானத்து இறைவாபோற்றி
ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய்போற்றி
ஓம் கல்மாரி காத்தாய்போற்றி
ஓம் கச்சி யூரகத்தாய்போற்றி
ஓம் வில்லியறுத்த தேவாபோற்றி
ஓம் வீடணனுக்கருளினாய்போற்றி
ஓம் இனியாய்போற்றி
ஓம் இனிய பெயரினாய்போற்றி
ஓம் புனலரங்காபோற்றி
ஓம் அனலுருவேபோற்றி
ஓம் புண்ணியாபோற்றி
ஓம் புராணாபோற்றி
ஓம் கோவிந்தாபோற்றி
ஓம் கோளரியேபோற்றி
ஓம் சிந்தாமணிபோற்றி
ஓம் சிரீதராபோற்றி
ஓம் மருந்தேபோற்றி
ஓம் மாமணி வண்ணாபோற்றி
ஓம் பொன் மலையாய்போற்றி
ஓம் பொன்வடிவேபோற்றி
ஓம் பூந்துழாய் முடியாய்போற்றி
ஓம் பாண்டவர்க் கன்பாபோற்றி
ஓம் குடந்தைக் கிடந்தாய்போற்றி
ஓம் தயரதன் வாழ்வேபோற்றி
ஓம் மதிகோள் விடுத்தாய்போற்றி
ஓம் மறையாய் விரிந்த விளக்கேபோற்றி
ஓம் வள்ளலேபோற்றி
ஓம் வரமருள்வாய்போற்றி
ஓம் சுதாவல்லி நாதனேபோற்றி
ஓம் சுந்தரத் தோளுடையாய்போற்றி
ஓம் பத்தராவியேபோற்றி
ஓம் பக்தோசிதனேபோற்றி.
Ragavendra Balaji
98400 20878 & 80155 45495,
Whats App – 86108 63805.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














