உலகம் முழுவதும் கொரொனா வைரஸுக்கு 3லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த வைரஸ் பாதிப்பு என்பது மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துள்ளது.
இதிலிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முயற்சி செய்து வருகிறது.
வைரசுடன் போராடி உயிர்களை காக்க வேண்டும், முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதற்கு, நாம் அனைவரும் தான் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.
உலகம் முழுவதும் 42லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 2.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பிற்கு பிறகு, புதிய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும்.
உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிற்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழ்நிலை கொண்டு வந்திருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிராக போரில் முக்கிய கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.
வைரஸுக்கு முன்பு இந்தியாவில் ppe தயாரிப்பு கிடையாது. ஆனால், தற்போது தினசரி இரண்டு லட்சம் உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும். உலகுக்கு இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. உலகின் கொள்கைகளையே இந்தியா மாற்றியமைத்து வருகிறது.
தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகத்திலேயே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணம். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்புத் திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இந்த பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கம் கிடைக்கும். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிப்பதில் இந்தியா முக்கிய இடம் பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும். யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதியேற்க வேண்டும்.
இந்திய மருந்துகள் உலகிற்கு தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை வைரஸ் மீட்பு நடவடிக்கைக்கு வழங்கப்படும். இந்த வைரஸ் பாதிப்பை இந்தியாவில் மக்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















