“மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாங்கு ஓதக்கூடாது. இது மற்றவர்களின் தூக்கத்தை பறித்து, தொந்தரவு செய்து உரிமைகளில் தலையிடுகிறது. பாங்கு ஓதுவது இஸ்லாத்தின் முறையாக இருந்தாலும், ஒலிபெருக்கிகள் மூலம் அழைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை. ஒருவருடைய செயல் மற்றவர்களின் மனித உரிமைகளை, அடிப்படை உரிமைகளை மீறக்கூடாது. . ஒலிபெருக்கிகள் இல்லாமல் பள்ளிவாசல்களின் கோபுரத்தில் இருந்து ‘முஅத்தின்’ இனி தொழுகைக்கு அழைக்க வேண்டும்” என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பல சமயங்களில் நீதிமன்றங்கள் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டிருந்தாலும், உத்தரவை அமல்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம், காவல் துறை செயல்படுத்த மறுப்பது சட்ட விரோதம். தமிழகத்தில் கூட இந்த உத்தரவு பின்பற்ற வேண்டிய நிலையில், தொடர்ந்து மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிப்பது சட்ட விரோதமே என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறையினர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுரை :- நாராயணன் திருப்பதி,மாநில செய்தி தொடர்பாளர்,தமிழக பாஜக.