கடந்தபாராளுமன்ற தேர்தலில், கரூர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
ஜோதிமணி. காரூர் பாராளுமன்ற தொகுதிக்கான அலுவலகம் கூட்டணி கட்சியான தி.மு.கவின் செந்தில்பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் அலுவலகம் உள்ளது.
மீதி உள்ள கரூர் உட்பட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில், அலுவலகம் இல்லை. இந்த பாராளுமன்ற அலுவலகம் இல்லாத பொதுமக்கள்,பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை தொடர்பு கொள்ள முடியாமல்தவித்து வருகின்றனர்.
அவரை போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர், சமூக வலைதளங்களில், ‘கரூர் எம்.பி., ஜோதிமணிக்கு திறந்த மடல்’ எழுதியுள்ளார்.அதில், ‘அம்மா, நீங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு, உங்களை தொடர்பு கொள்ள எந்த வாய்ப்பையும் தருவதில்லை.
‘பொதுமக்கள், உங்களை அணுகாதவாறு தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தால், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்து, தேவையான உத்தரவுகளை பெற வேண்டிய நிலைக்கு, எங்களைப் போன்றோர் தள்ளப்படுவர்’ எனக் கூறியுள்ளார்.