இப்பொழுது விகடனுக்கு சைமன் கொடுத்திருக்கும் “இட்லி வித் பொட்டு அம்மான்” என சொல்லி, பொட்டம்மானை அவர் இழுத்து அவரோடு பொட்டுகடலை சட்னிவைத்து இட்லி சாப்பிட்டேன் என்பதெல்லாம் அவருக்கும் நல்லதல்ல! தம்பிகளுக்கும் நல்லதல்ல!
புலிகளின் பிரதான பலம் மூன்று ஆண்டன் பாலசிங்கம், பொட்டம்மான் மற்றும் பிரபாகரன். இதில் பிரபாகரன் முக ஸ்டாலின் போல ஒரு தத்தி முகமூடி. பாலசிங்கமும் பொட்டம்மானுமே இயக்கத்தின் பலம் அவர் இயற்பெயர் சிவசங்கரன், அவர் இணைந்தபின்பே புலிகளின் பலம் பன்மடங்கு உயர்ந்தது. அம்மான் என்றால் மாமன் என பொருள், மூத்தோரை ஈழத்தில் அப்படி சொல்வர். பொட்டு வைத்திருந்த்தாலும் எதிரிக்கு நெற்றியில் பொட்டு வைப்பதாலும் பொட்டு அம்மான் ஆனார்
சும்மா சொல்லகூடாது புலிகளின் மிகபெரும் பலம் அவர்களின் உளவு அமைப்பு, அதுதான் அவர்களின் வெற்றிக்கும் நிலைபாட்டுக்கும் காரணம், பொட்டு அதில் கைதேர்ந்திருந்தார்.ஈழத்தில் புலிகள் நிலைக்க அவர்தான் காரணம், அதில்தான் சகல போராளி தலமையினையும் முந்திகொண்டு புலிகளால் ஒழிக்க முடிந்தது, கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் அவர்கள் இவர்களை ஒழிப்பர், முந்தி கொள்வது பொட்டம்மான்
ஈழத்தில் புலிகளின் கொடி அவரால் உயர பறந்தது,, பொட்டம்மான் மாபெரும் ஆபத்து என முதலில் உணர்ந்தது இந்திய அமைதிபடை, ஆம் இந்திய அமைதிபடைக்கு அணை அணையாய் தண்ணி காட்டியது பொட்டம்மான்.இந்திய படை அவனை குறிவைத்தது, மகா மகா கில்லாடியான பொட்டம்மான் தான் நடமாடும் இடமெல்லாம் அவசர சிகிச்சை இடத்தை ஏற்படுத்திவிட்டே நடமாடினான், அவனின் முன் எச்சரிக்கை அப்படி
அவன் எதிர்பார்த்தபடியே இந்திய அமைதிபடை சுட்டது, அவன் வயிற்றில் குண்டு பாய்ந்தது. எங்கு சுடபட்டால் எப்படி தப்பிக்க வேண்டும் என மிக எச்சரிக்கையாக இருந்த பொட்டு வாழை தோப்ப்பில் ஓடி மறைவிடத்தில் ஒழிந்து அனாசயமாக தப்பினார்
இன்றுவரை அது ஆச்சரியமே, இந்திய ராணுவம் சுற்றிவளைக்கபட்ட நிலையில் சிகிச்சை எடுத்தது எப்படி? தப்பியது எப்படி என்பது இந்தியா ராணுவத்துக்கு தலைகுனிவே அன்று தப்பிய பொட்டம்மானே ராஜிவ் கொலைக்கு திட்டமிட்டான், ராஜிவ் கொலையின் முழு சூத்திரதாரி அவனே
ராஜிவ் கொலையில் புலிகளின் செய்திபரிமாற்றத்தை இடைமறித்து எடுத்த இந்தியாவுக்கு அதை உடைக்கும் வழி தெரியவில்லை பின் எப்படியோ சிறைபட்ட புலிகளை தாஜா செய்து, இந்திய உளவாளிகளை புலிபிரிவுக்குள் அனுப்பி [ வேலூரில் தப்பிய கைதிகள், ராஜிவ் கொலையில் தப்பவிட்ட புலிகள்] மூலம் அதை உடைத்தனர்
அந்த கோட் வேட் எனும் பாதுகாப்பு கண்டு இந்திய உளவுதுறையே அதிர்ச்சியில் இருந்தது காரணம் கிட்டதட்ட மொசாத்தின் சாயல் அதுபொட்டம்மானை ராஜிவ் கொலை குற்றவாளியாக சேர்த்த இந்தியா அவனை கொல்ல காலம் பார்த்தது, கிட்டுவின் கப்பலில் பொட்டு அம்மான் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கப்பலோடு கொழுத்தினார்கள் பொட்டு சிக்கவில்லை
2006ல் புலிகளுக்குள் ஈகோ சிக்கல் வந்தது, கருணா பிரிவு கேபியிடமிருந்து ஆயுத கொள்முதல் கேஸ்ட்ரோ எனும் மாற்றுதிறனாளிக்கு வந்தது என சிக்கல் ஏராளம், ஆனால் உளவுபிரிவு சரியாக இருந்தது புலிகளின் உள்கோஷ்டி சண்டையே தோல்விக்கு காரணம், அந்த சிக்கலில் பொட்டம்மானால் சாதிக்க முடியவில்லை, எனினும் இனி ஆயுதம் கடத்தமுடியாது என எல்லா புலிகளும் கைவிட்ட நிலையில் பொட்டு அந்த சாத்திய சாதனையினை செய்தான்
தன் தொடர்பு நிலையத்தை கன்டாவில் நிறுவி வெளிநாட்டு மாலுமிகளை வேலைக்கு அமர்த்தி புலிகள் சாயலே இல்லாமல் கப்பலை இயக்கி சில பொருட்களை முல்லைதீவு கொண்டு சேர்த்தான் எல்லா புலிகளும் வாயடைத்து நின்ற நேரமது ஆனால் நிலமை எல்லை மீறி சென்றிருந்தது
ஈழபோராட்டம் பொட்டு தலைமையில் நடைபெற்றிருந்தால் என்றோ வென்றிருக்கும், ஆனால் உலகை ஏமாற்ற பிரபாகரன் எனும் முகமூடி போட்டதில் அவரே எல்லாமும் ஆகி திமுக போல் ஆனது ஈழ புலி நிலமை
அந்த பொட்டுவினை சிங்களம் கடைசியில் குறிவைத்தது, நெருங்க முடியவில்லை. தமிழ்செல்வன் பிரபாகரன் என கொன்றாலும் கடைசி வரை பொட்டு என்ன ஆனான் என தெரியவில்லைஅமைதிபடை காலத்திலே பாடம் பெற்ற பொட்டு முள்ளிவாய்க்காலில் சிக்கினால் எப்படி தப்பவேண்டும் என திட்டமிட்டிருப்பான் என்பது நிஜம், அவன் தப்பியதும் நிஜம்
இந்தியா கடைசியில் புலிகளிடம் கேட்டது என்ன தெரியுமா? பிரபாகரன் வேண்டாம் பொட்டு சரணடைந்தால் போதும்., சில உண்மைகளை ஒப்புகொள்ளத்தான் வேண்டும், பொட்டு உயிரோடு தப்பியது நிஜம் அவனை பற்றிய தரவு யாரிடமும் இல்லை, யுத்தத்தில் அவன் சாகவில்லை அவன் உடலையோ அடையாளத்தையோ சிங்களனாலும் காட்டமுடியவில்லை
அவன் ஏதோ ஒரு நாட்டில் இருப்பது நிஜம், எரித்திரியாவில் இருந்ததாக இந்திய உளவுதுறை 2010ல் மோப்பம் பிடித்தது அதன் பின் தகவல் இல்லை சுப்பிரமணியன் சாமி சில வருடங்களுக்கு முன் அவனை பற்றிய தகவலை அவன் ஐரோப்பாவில் இருப்பதை சூசகமாக தெரிவித்தார்
இலங்கை உளவுதுறை பொட்டு தலமையில் புலிகள் எழகூடாது என பொட்டு பிரபாகரனை தலையில் கொத்திவிட்டு ஓடிவிட்டதாக கதைகட்டி விட்டது, அட்டகாசமான தந்திரம் அது சரி பொட்டு எங்கே என்றால் அவர் உயிரோடுதான் இருக்கின்றார், புலிகள் இயங்கவில்லை தவிர அவர்களின் உளவு நெட்வொர்க் அப்படியேதான் இருக்கின்றது
ஆனால் உலகள்வில் அல்கய்தா, ஐஎஸ் என எல்லா தீவிரவாத இயக்கமும் ஒழித்துகட்டபடும் நேரமிது, இனி ஆயுத போராட்டம் வெல்லமுடியா காலம் என்பதால் அவர் அமைதி இன்னும் இலங்கை முழுக்க ராணுவம் நிற்க பொட்டுதான் காரணம்
மாபெரும் வித்தகன் அவன், அவனோடு இட்லி உண்டேன் என அசால்ட்டாக சொல்கின்றார் சைமன், பொட்டு எங்கிருந்தோ இதை சிரித்தபடி கேட்டுகொண்டிருக்கலாம் புலிகள் வழக்கபடி பெரும் தலைகள் ஒரு நாளும் நேரடியாக சந்திக்காது, மகா மகாமுக்கிய நிகழ்வில் சில நொடி சந்திப்பார்கள் அத்தோடு பிரிவார்கள் , மொத்தமாய் சாக கூடாது எனும் திட்டம் அது
அந்த இயக்கத்தின் தலைவர்கள் ஏதோ மொத்தமாக் 3 சீட்டு ஆடியது போலவும் அங்கே இவருக்கு இட்லி டீ கொடுத்தது போலவும் கதை அளக்கின்றார் அன்னார் எம்மை பொறுத்தவரை உறுதியாக சொல்லலாம், புலிகள் இன்னும் பலத்தோடுதான் இருக்கின்றார்கள், சீமானை அவர்களால் அசால்ட்டாக கடத்தமுடியும், நிச்சயம் முடியும்
ஒரு நாள் அங்கிள் சைமன் பொட்டு அம்மனோடு இட்லி சாப்பிடத்தான் போகின்றார் எப்படி என்றால் சைமனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டிருப்பார்கள், அவர் முன்னால் பொட்டு இட்லி சாப்பிட்டு கொண்டு இவருக்கு ஊட்டியும் விடுவார்..
நன்றி Stanley Rajan
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















