இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல லட்சம் மக்கள் கொரோனா வைரஸிலிருந்து காப்பற்றபட்டுள்ளனர், உலக நாடுகள் கணிதத்தை மத்திய அரசு சுக்கு நூறாகியுள்ளத்து.
மே மாதம் இந்தியாவில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைப்பு கூறியது 1 லட்சம் வரி இந்தியாவில் இறப்புகள் ஏற்படும் என கூறியது. ஆனால் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையால் பாதிப்பு மிக குறைவு, இதற்கு உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகிறது. ஆனால் இங்கு உள்ள எதிர்கட்சிகளோ அரசினை எப்படி திட்டுவது குறைகூறுவது என காரணத்தை தேடி வருகிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.’வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை’ என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இப்பிரச்னையை முன் வைத்து மாநில அரசை கண்டித்து காங்கிரஸ் – எம்.எல்.ஏ.க்கள் ஜித்து பத்வாரி, விஷால் பட்டேல், சஞ்ஜய் சுக்லா ஆகியோர் இந்துாரில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஆதரவாளர்கள் அந்த இடத்திற்கு குவிந்தனர். இது நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. என தெரிந்தும் காங்கிரஸ் இது போன்று கீழ் தரமான செயலில் இறங்கியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு இந்துார் எஸ்.பி. திவாரியும், துணை ஆட்சியர் ராகேஷ் ஷர்மாவும் விரைந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங். – எம்.எல்.ஏ.க்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
மேலும் அவர்களுக்கு அருகில் சென்ற இவர்கள் இருவரும் மண்டியிட்டு கைக்கூப்பி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த ‘வீடியோ’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் முன் மண்டியிட்ட எஸ்.பி.,யையும் துணை ஆட்சியரையும் தலைநகர் போபாலுக்கு பணியிட மாற்றம் செய்து மாநில அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராகேஷ் ஷர்மாவை பொது நிர்வாகத்துறையின் துணை ஆட்சியராகவும் , திவாரியை மாநில போலீஸ் தலைமையகத்தின் துணை கண்காணிப்பாளராகவும் நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட காங் – எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின் ஜூன் 29ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி தெரிவித்து விடுவிக்கப்பட்டனர்.