உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் ஆடிவருகிறது. எப்போது இந்த கொரோன வைரஸின் தாக்கம் குறையும் என்பதையும் கூறமுடியாத நிலை தற்போது, இந்த நிலையில் உலகின் செயல்பாடுகளை கொரோனா மாற்றி அமைத்துள்ளது. சில நன்மைகள் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகமே சீர்குலைந்து விட்டது இந்த கொரோனவின் கொடூர தாக்குதலால் .
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 40 ஆண்டுகளில் முதல் முறையாக மாற்றியுள்ளது. சினிமா துறை சீரழிந்து விட்டது. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கி கிடக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் படங்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருதுக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முன்பு தியேட்டர்களில் திரையிட்ட படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு தகுதி பெற்றன.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது கொரோனாவால் விருது வழங்கும் விழாவை நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தன
93 வது ஆஸ்கார் விருதுகள் இனி திட்டமிட்டபடி பிப்ரவரி 28 அன்று நடைபெறாது என்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் திங்களன்று அறிவித்து உள்ளது அதற்கு பதிலாக, 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.
தாமதத்திற்கு கூடுதலாக, அகாடமி படங்களுக்கான தகுதி சாளரத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டது, 2021 ஆஸ்கார் விருதுகளுக்கு, புதிய சாளரம் பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்படும். சமர்ப்பிக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்படும் என அமைப்பு கூறிஉள்ளது.
பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் தேதியும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அவை ஏப்ரல் 11, 2021 க்கு திட்டமிடப்பட்டுள்ளன.