கேரள முதல்வர் பினராயி விஜயன் இவர் கண்ணூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் . பினராயிக்கு கமலா என்ற மனைவியும் வீனா என்ற மகளும் விவேக் என்ற மகனும் உண்டு. மகள் வீணாவுக்கு திருமணமாகி விவாகரத்தாகி உள்ளது இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். பெங்களூருவில் தனியாக மிக பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார் கேரள முதலவர் பினாரயி மகள் வீனா.
இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முகமது ரியாசுக்கும் வீணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. முகமது ரியாசும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். முகமது மற்றும் பினாரயிமகள் வீணாவிற்கும் திருமணம் செய்ய முடிவெடுத்த, நிலையில் கேரளமுதல்வரும்அதற்கு சம்மதித்தார். இவர்களின் திருமணம் (ஜூன் 15- ந் தேதி ) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
தற்போது பினராயி வீட்டு திருமண புகைப்படங்கள் வெளியானது. இந்த புகைப்படங்களால் கேரள முதல்வருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளன. வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் முதல்வர் பினராயி விஜயன் அருகில் முகமது ஹாசிம் என்பவரும் நிற்கிறார். இந்த இப்போது பிரச்சனை
யார் இந்த ஹாசிம்
இந்த முகமது ஹாசிம் என்பவன் கொலை வழக்கு ஒன்றில் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தவன். அதுவும் கேரளா உயர்நீதிமன்றம் முகமது ஹாசிமை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்தது ஆனால் உச்சநீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதி செய்து சிறைக்கு அனுப்பியது.
ரியாஸின் உறவினர்
தற்போது கொரோனா பாதிப்பில் பரோலில் வெளிவந்த முகமது ஹாசிம், மணமகன் ரியாஸுக்கு மிக நெருங்கிய உறவினர் என்ற அடிப்படையில் இத்திருமணத்தில் பங்கேற்றார் என கூறப்படுகிறது. தண்டனை பெற்ற கொலை குற்றவாளியை எப்படி முதல்வர் தமது அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் அனுமதிக்கலாம்?
ஆளும் கட்சியில் அதிருப்தி
இதேபோல் பினராயி விஜயனின் சி.பி.எம். கட்சியிலும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. 30 பேர் மட்டுமே பங்கேற்கும் திருமணம் என்பதால் முகம்மது ஹாசிமை தவிர்த்திருக்க வேண்டும். உளவுத்துறை இதில் தோல்வி அடைந்துவிட்டது என சொந்த கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொலையாளி உறவினராக இருந்தாலும் சரி கல்யாணத்தில் முதலவர் பக்கத்தில் நிற்க வைப்பது மிக பெரிய தவறாகும். அதுவும் ஜாமீனில் தான் வெளிவந்துள்ளார். காவல்துறை என்ன செய்தது அவன் முதல்வர் வீட்டுக்கு வர. அதே போல் இல்லை கேரள முதல்வர் இதற்கு சம்மதித்தாரா என்பது போக போக தான் தெரியும் ! அதே போல் இந்த சம்பவம் கேரள மக்கள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.