மதுரை மாநகர் அரசரடி பகுதியைச் சேர்ந்த ஜஹாங்கீர் இவருக்கு வயது 56. இவருடைய உறவினர்கள் வீடு அரசடி பகுதியில் உள்ளது. ஜஹாங்கீர் அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வார். அங்கு செல்லும் போது அந்த வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்து பலமுறை பாலியல் வன்புணர்வு சீண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
அந்த பகுதியை சேர்ந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த அவரின் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது மருத்துவர்கள் கொடுத்த செய்தி தான் அது. சிறுமி நீண்ட நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டிற்கு வந்த 56 வயது முதியவரான ஜஹாங்கீர் சிறுமியை அடிக்கடி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகரத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையிர் ஜஹாங்கீர் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்10 வயது சிறுமியை மாதக் கணக்கில் 56 வயது முதியவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















