தற்போது சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சனை ராணுவ வீரர்களின் மோதல் என நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாட்டிற்குள் இருந்து கொண்டே இந்தியாவை துண்டாட நினைக்கும் தேசவிரோதிகளுடன் போராடி கொண்டிருக்கிறது ராணுவம். ஜம்மு-காஷ்மீரில் ஷோபியன் மற்றும் பாம்பூரில் நடந்த இரண்டு துப்பாக்கி சண்டையில் எட்டு பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இதில், பாம்பூர் பகுதியில் நடந்த மோதலில் மசூதிக்குள் தங்க வைக்கப்பட்டிருந்த இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வெளியேற்றி உள்ளது . இந்த நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் வெறும் கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
யங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களைப் பெற்ற பின்னர் பாதுகாப்புப் படையினர் நேற்று காலை ஷோபியன் மற்றும் பாம்பூர் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கினர். ஷோபியனில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், மூன்று பேர் பாம்பூரில் கொல்லப்பட்டனர்.