கேரளா கொச்சியைச் சேர்ந்த கேரள பெண் செயற்பாட்டாளர் என கூறி கூறி கொண்டு சமூக கலாச்சாரத்தை சீரழித்து வருபவர் தான் இந்த ரெஹானா பாத்திமா தனது சொந்த மகனை வைத்து அறுவருக்கதக்க செயலை செய்துள்ளார். தந்து அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை ஓவியம் வரைய வைத்து அதை வீடியோவும் எடுத்து யூடியூப் முகநூலில் பகிர்ந்துள்ளார். இந்த கேவலமான செயலுக்கு அந்த வீடியோ ஹேஷ்டேக்குடன் ‘பாடி அண்டு பாலிடிக்ஸ்’ என்ற என்ற தலைப்பில் பகிரப்பட்டு உள்ளது. அரை நிர்வாண நிலையில் பாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும் மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல அந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிமிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் சமூக செயற்பாட்டாளரா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
இந்நிலையில், ரெஹானா பாத்திமா மீது தனது அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளின் ஓவியம் வரைவதற்கு அனுமதித்ததாகவும், அதனுடன் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் திருவல்லா காவலர்கள் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கேரள காவல் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வரும் ஜாமீனில் வெளிவராத குற்றங்களை சுட்டிக்காட்டி பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் அருண் பிரகாஷ் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா 2018 அக்டோபரில் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளானார்.ஐய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்டதற்காக பாத்திமா கைது செய்யப்பட்டு 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.