சாத்தான்குளம் வியாபாரிகள் இறப்பு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு – வணிகர் சங்கம் அறிவிப்பு.
சாத்தான் ககுளத்தில் நடந்த வணிகர்கள் கொலைகள் பற்றி வழக்கை நீதிமன்றம் தாமாக எடுத்து விசாரிக்க உள்ளது.முதல்வர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பணிமாற்றம்,காத்திருப்போர் பட்டியலில் வைத்து நிதி உதவியும் அறிவித்துவிட்டது மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவித்துவிட்டார்கள்.இது தவிர மனித உரிமை ஆணையமும் விசாரிக்க உள்ளது.இத்தனை இருக்கும் போது ஓட்டு மொத்த வியாபாரிகள் ஏன் கடையை அடைக்க வேண்டும். கொரோனாவால் பலியான மாம்பலம் கவால்துறை அதிகாரி இறந்தார் அதற்ககாக காவல்துறை போராட்டம் செய்ததா தவறு யார் மேல் உள்ளது என விசாரணையில் தான் தெரிய வரும். மேலும் சட்டத்தை மீறியது யார் எதற்காக இப்படி அடிக்க வேண்டும் என பல பிரச்சனைகள் உள்ளது இதில். இந்த கொரோன காலகட்டத்தில் மக்களை கெஞ்சி வெளியே வராதீர்கள் என்று காவலர்கள் வேண்டுகோள் விடுத்த சம்பவம் உள்ளது.
தற்போது கூட மக்கள் நடமாட்டம் குறைவு தான் எந்த வியாபாரிக்கும் வியாபாரம் இல்லை,பல ஊர்களில் கடை திறக்க நேரகட்டுப்பாடு கடன் தொல்லைகள் என பல சிக்கல்களுக்கு நடுவே வணிகர்கள் தொழில் நடத்தி வரும் வேலையில் ஏதற்க்கு இந்த கடையடைப்பு.
எத்தனையோ வியாபாரிகள் இதற்க்கு முன்பு பாதித்து இருந்தார்கள் அதற்கு போராடாதவர்கள் தற்போது போராடுகிறார்கள். அது மட்டுமா ஊரடங்கு காலத்தில் இருசக்கர வாகனங்களில் பொருட்கள் வாங்க கூடாது என சொல்லியும் தினமும் வாகன நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாங்கி செல்கிறார்கள் சில்லறை வியாபாரிகள்.
திமுக இதில் மீண்டும் அரசியல் செய்ய நினைக்கிறது. கனிமொழி அங்கே சென்ற பிறகுதான் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கரோனா காலத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில கூடியது கொரோனா பரப்புவதற்காக இந்த அரசியலை திமுக கையில் எடுத்துள்ளதாகவே தெரிகிறது. அன்பழகன் மறைந்த போதும் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் போதும் திருவள்ளூரில் பொதுக்குழு உறுப்பினர் பிறந்தநாள் கொண்டாடியது தப்லிக் ஜமாத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது எல்லாம் பார்க்கும் போது திமுக தான் காரணமோ என்ற எண்ணம் தோன்றுகிறது
வணிகர்களே யோசிக்க வேண்டும் ஓட்டு மொத்த தமிழக மக்கள் பாதித்தால் யாருக்கு நட்டம் என்று புரியும்