சாத்தான் ககுளத்தில் நடந்த வணிகர்கள் கொலைகள் பற்றி வழக்கை நீதிமன்றம் தாமாக எடுத்து விசாரிக்க உள்ளது.முதல்வர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பணிமாற்றம்,காத்திருப்போர் பட்டியலில் வைத்து நிதி உதவியும் அறிவித்துவிட்டது மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவித்துவிட்டார்கள்.இது தவிர மனித உரிமை ஆணையமும் விசாரிக்க உள்ளது.
இத்தனை இருக்கும் போது ஓட்டு மொத்த வியாபாரிகள் ஏன் கடையை அடைக்க வேண்டும். அதற்ககாக காவல்துறை போராட்டம் செய்ததா தவறு யார் மேல் உள்ளது என விசாரணையில் தான் தெரிய வரும். இந்த நிலையில் மேலும் சட்டத்தை மீறியது யார் எதற்காக இப்படி அடிக்க வேண்டும் என பல பிரச்சனைகள் உள்ளது இதில். ரிச்சி தெரு சென்னையிலுள்ள பிரபலமான சந்தைத் தெரு. இங்கு கடை வைத்திருக்கும் தினேஷ் என்ற வியாபாரி ஒருவர் கடை உடைக்கப்பட்டது அதற்கு வணிகர்சங்கம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
மேலும் நெல்லையில் ஒரு சமுதாயத்தினர்இந்து வணிகர்களை தாக்கியது அதற்கும் குரல் எழுப்பாத விக்கிரமராஜா அவர்கள் இப்போது மொட்டும் கொந்தளிப்பது ஏன்? மத அடிப்படையில் வணிகர் சங்கம் செய்லபடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது? .
இந்த நிலையில் தி.மு.க தனது அரசியலை முன்னெடுத்துள்ளது. சாத்தான் குளத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி கொடுத்துள்ளது. அதே தி.மு.க தாய் நாட்டிற்காக உயிரை கொடுத்த தமிழக வீரர் பழனி அவர்கள் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை ஏன் என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளார்கள்.
மேலும் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ஒரு அமைப்பினர் மதம் மாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரின் குடும்பத்திற்கு திமுக எவ்வளவு கொடுத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சாதி மதத்தை வைத்து அரசியல் செய்வது திமுக என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















