தமிழகத்தில் பா.ஜ.க என்றால் கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டம் தான் என் என்றும் முதல் இடத்தில் இருக்கும் ஆனால் இப்பொழுது உறுப்பினர் சேர்க்கையில். தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில் முதன்மை தொகுதியாக திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கையில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவருமான கலிவரதன் இவர் நாள் தோறும் தீவிர உறுப்பினர் சேர்க்கை ஈடுபட்டு வருகின்றார்.இவர் மக்களின் பிரச்சினைக்கு உடனுக்குடன் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று நடத்தி மக்களின் ஆதரவை பா.ஜ.க பெற்று தந்து வருகிறார்.
இதனால் மாவட்டத்தில் உள்ள மாற்றுக் கட்சியில் உள்ளவர்களும் இதுவரை எந்த கட்சியிலும் அல்லாதவர்களும் தாமாக முன்வந்து கலிவரதன் முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர். தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஊருக்குச் செல்வோம் உண்மையை சொல்வோம் உரக்கச் சொல்வோம் என்ற முழக்கத்தை எடுத்துக்கொண்டு மக்களிடம் சென்று மோடி அரசின் சாதனைகளை விளக்கி கூறவேண்டும் என்று கூறிய திட்டத்திற்கு.
இதுவரை தமிழகத்தில் எவரும் செய்திராத வண்ணம் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுவர்களில் எழுதப்பட்டு.மக்கள் பார்வையில் வியக்கும் அளவிற்கு வளர்ச்சி செயல்பட்டுவருகின்றது.
அதேபோல் உலகை அச்சுறுத்திய கொடிய கொரோனா வைரஸ் நோய் பரவிக் கொண்டிருந்த போது உணவுக்கு வழியின்றி இருந்த ஏழை எளிய மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வந்தது.
அதிலும் விழுப்புரம் மாவட்ட முதன்மை இடம்பெற்று மோடி கிட், தினம்தோறும் உணவு, மாஸ்க், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல உதவிகளை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க வினர் செய்து உள்ளனர்.இந்த குறுகிய காலத்தில் மட்டும் மக்களின் பேராதரவை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.இவரின் கட்சி பணியை பார்த்து மாற்றுக் கட்சியினரும் சொந்தத்தின் அருமை பொறாமைப்படும் அளவிற்கு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மாவட்டதில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து நின்றாலும் அல்லது கூட்டணி கட்சிகள் இருந்தாலும் தலைமை சொல்லும் வேட்பாளருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்காக பாடுபடும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்