தற்போது உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் நாராயண மந்திரம் சொல்வதும் நாராயணீயம் படிப்பதும் நோய் நம்மை விட்டுப் போக உதவும் என்பதால் பக்தர்கள் இதைக் கடைப்பிடிக்கக்கலாம் என்று ஜீயர் கூறியிருந்தார். மத நம்பிக்கை என்பது உண்மை பொய் என்ற செயல்களில் அடங்காது.
இது அறிந்தும் ஜீயரை கைது செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் சொன்னால் அவர் திட்டமிட்டே இந்து துறவியர் மீதும் இந்து மதத்தின் மீதும் விஷம் கக்குகிறார் என்று தான் அர்த்தம்.
தெய்வீக சுகமளிக்கும் சுவிசேஷ ஆராதனைக் கூட்டங்கள் நடத்தியவர்கள கைது செய்ய இவர் கோரியதில்லை. அரசு உத்திரவை மீறி மதக் கடமை என ஓடி மறைந்த தப்லிக் ஜமாத்தாரை கைது செய்யக் கோரியதில்லை.எனவே மதங்களிடையே துவேஷத்தை உருவாக்கும் சிபிஎம் கட்சியின் கனகராஜ் அரசு கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
ஆக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான ஹிந்து விரோத கட்சி மட்டுமே, பாட்டாளி வர்க்க கட்சி அல்ல என நாம் புரிந்து கொள்வோம். 25 கோடி திமுகவிடம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு எதிராக பேசும் கை கூலிகளாகவே கம்யூனிஸ்ட் இருக்கின்றார்கள் என சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கம்யூனிஸ்டுகள் மதங்களுக்கு அப்பாற்பட்டு பாட்டாளிகளுக்கு உதவுவார்கள் என்று நம்பி ஏமாறும் இந்துக்கள் அந்தக் கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















