புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் துபாயில் வேலை செய்து வந்தார்.உடல்நிலை சரியில்லாமல் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் .இந்த சூழ்நிலையில் பொன்னமராவதி குமரன் அன்னவாசல் ஒன்றிய தலைவர் செல்லத்துரை மற்றும் அன்னவாசல் வெற்றி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் இராமசேதுபதி மற்றும் மகளிர் அணிதலைவர் திருமதி கவிதா ஸ்ரீகாந்த் அவர்களிடம் ஊர் திரும்புவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அதை ஏற்று அந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வழிகாட்டுதலின் படி திருமதி கவிதாஸ்ரீகாந்த் அவர்கள் மாநிலச் செயலாளர் திரு.KT இராகவன் அவர்களிடம் சரவணன் ஊர் திரும்ப ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தார்கள் அதையேற்று திரு.KT இராகவன் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஏற்பாடு செய்து கொடுத்து திரு சரவணன் அவர்கள் நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்
பத்திரமாக சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்து தந்த பாஜக மாநில செயலாளர் திரு.KT.இராகவன் அவர்களுக்கும் திருமதி கவிதா அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















