பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்’ ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது இந்த மருத்துவ கிட் மூலம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மருத்துவ ரீதியில் சோதித்ததில் 100 சதவீத சாதகமான முடிவுகள் வந்துள்ளன என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தெரிவித்தது.
இதுகுறித்து சர்ச்சைகளும் வெடித்தது வழக்குகளும் தொடர்ந்தார்கள். இந்த நிலையில் ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனம் அறிவித்த கரோனில் என்ற மாத்திரையும் ஸ்வாஷரி என்ற மாத்திரையும் அனு தைலமும் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று விளம்பரம் செய்து விற்கலாம், ஆனால் கொரோனா நோய்க்கான மருந்து என்று விளம்பரம் செய்து விற்கக் கூடாது என ஆயுஷ் அமைச்சகம் நிபந்தனை விதித்து மருத்துக்களை விற்க அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து பதஞ்சலி நிறுவனர் யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும் பதஞ்சலி நிறுவனத்துக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. கரோனில் மருந்தை விற்க அனுமதியளித்துவிட்டது. இன்று முதல் இந்த மருந்து அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும் என்றார்.