இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் திடீர் பயணமாக இந்தியாவின் எல்லை பகுதியான லாடாக்கிற்கு சென்றார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானேவுடன் ஆகியோரும் சென்றனர். ஹெலிகாப்டர் மூலம், லடாக்கில் உள்ள நிமு என்ற முன்தளப் பகுதிக்கு சென்றார்கள். இந்த பகுதி, கடல்மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் ஜான்ஸ்கர் சரகத்தில் அமைந்துள்ளது.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகே அமைந்துள்ள பகுதி ஆகும். மேலும் மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பு, மோசமான வானிலை நிலவும் பகுதியாகும்.அங்கு, ராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்கள், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் உரையாற்றுகையில் இராணுவ வீரர்களை மிகவும் பெருமைப்படுத்தி பேசினார்.
பிரதமர் பேசியதாவது : நீங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது உங்கள் வீரம்நாட்டின் பாதுகாப்பு ராணுவ வீரர்களான உங்கள் கைகளில் தான் உள்ளது.இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான்ராணுவ வீரர்களின் வீரத்தால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர்
இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானதுஇந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது.ஒட்டு மொத்த உலகிற்குமே இந்திய ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான ஒரு தகவலை அளித்துள்ளது
ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.வீர மரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. லாடாக் முதல் கார்கில் வரை இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு பல உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் எதிரிகளுக்கு நமது ராணுவம் தக்க பாடம் புகட்டியுள்ளது. தாய்நாட்டை காப்பதற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயார். நமது எதிரிகளின் கோழைத்தனமான திட்டங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது. பாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன் நமது ராணுவ வீரர்கள் எல்லையை காத்து நிற்கிறார்கள்
நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் நாம் தவிடுபொடியாக்கிக் கொண்டிருக்கிறோம். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நிகரானது எதுவும் இல்லைகால்வன் பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்பதில் எந்த மாற்றமும் இல்லைராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக இருப்பது அவர்கள் முகத்தை காணும் போது தெரிகிறது நாம் கடந்த காலங்களில் பல எதிரிகளுடன் போரிட்டுள்ளோம்நமது வீரம் வழிவழியாக வந்த வரலாற்றுச் சிறப்புமிக்கது
தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத்தியுள்ளது.சியாச்சின் முதல் கால்வன் வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி.இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை உலகம் அறியும் வீரம் என்பது அமைதியை நோக்கிச் செல்வது இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். என உரை நிகழ்த்தினார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















