இந்தியாவில் பொழுதுபோக்கிற்க்காக மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, போன்ற மொபைல் செயலிகள் ஆகும். இது ஒருவித கலாச்சார சீர்கேட்டுக்கும் வழிவகுத்தது. மக்களை பைத்தியம் ஆக்கியது , ஆபாசம் நிறைந்த செயலியாக இருந்து வந்தது டிக் டாக். சீனாவுடன் தொடர்புடைய 59 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் 15-ம்தேதி லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்திய இராணுவ வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தார்கள்.
சீன தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சீனாவிற்கு பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.இது டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று கூறலாம்.இதனால் டிக் டாகின் தாய் நிறுவனத்திற்கு 45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது
இந்திய சீன எல்லை மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லலையில் ஏற்பட்டிருக்கும் பதட்டம் காரணமாக காரணமாக,மேலும் 89 செயலிகளை தடை செய்துள்ளது இந்திய ராணுவம், இதற்கான முடிவு புதன்கிழமை இரவு இந்திய ராணுவ ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலிகள் இன்னும் பொதுமக்களுக்குக் கிடைக்கும், இராணுவப் பணியாளர்களால் அவற்றை இனி பயன்படுத்த முடியாது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெய்லிஹன்ட் உள்ளடக்கிய 89 செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்கள் பணியாளர்கள் அனைவரும் இந்த செயலிகள் இருக்கும் தங்கள் கணக்குகளை நீக்குமாறு ராணுவ கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.