உத்திர பிரேதேசத்தில் சமீபத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களை கொன்ற விகாஸ் துபே பல தப்பி சென்றான் கான்பூரில் உள்ள தனது கிராமத்திலிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத் வரை சென்றார், காவல்துறை தனிப்படைகள் அமைத்து தேடிவந்த நிலையில் மத்திய பிரேதேசத்தில் கைது செய்யப்பட்டான் இதற்கு முன்னராக அவனது கூட்டாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் துபேயின் இரண்டு கூட்டாளிகள் உத்தரபிரதேச காவல்துறையினரால் தனித்தனியான சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன அதனை தொடர்ந்து துபேயின் மனைவியும் மகனும் லக்னோவில் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் விகாஸ் துபே நேற்று கைது செய்யப்பட்டான். பின் அங்கிருந்தது உத்திரப்பிரேதசம் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்தன
உத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது சாலை விபத்தில் அவன் சென்ற கார் சிக்கியது. பின்னர் அங்கிருந்து அவர் தப்ப முயன்றபோது விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டான்.