சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் ( Health and wellness centers (HWCs) )ஆயுஷ்மான்
பாரத்தின் அடிப்படைத் தூண்களாக உள்ளன.நாட்டிலுள்ள 1,50,000 துணை சுகாதார மையங்கள்
மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் உரிய முறையில் மாற்றியமைக்கப்பட்டு,அவைகள்
உலகளாவிய விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பை 2022 ஆண்டிற்குள் வழங்க வேண்டும்
என்பது ஆயுஷ்மான் பாரத்தின் நோக்கமாகும்.
ஜார்கண்ட் மாநிலத்தில்,HWC teams மக்களை இன்ஃப்ளுயன்ஸா மற்றும் கடுமையான
மூச்சுத்திணறல் போன்ற நோய்களின் அறிகுறிகளுக்கு பரிசோதனை செய்து,கோவிட் 19
பரிசோதனையையும் உறுதிச்செய்தன.
ஒடிஷா மாநிலம் சுபாலயாவில் HWC குழுவினர் சுகாதார பரிசோதனை செய்து கோவிட் 19
தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ராஜஸ்தான் மாநிலம் கிராந்தியில் உள்ள HWC குழுவினர் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு
உதவி புரிந்து பிகானர்- ஜோத்பூர் எல்லை சோதனைச்சாவடி வழியாக பயணம் செய்தவர்களுக்கு
கோவிட் 19 ற்கான மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இந்த வருடம் பிப்ரவரி 1 ந் தேதி தொடங்கி நாளது வரையிலான ஐந்து மாதக்காலத்தில்
HWCகளில் 8.8 கோடி பேர்களின் வருகை பதிவுச்செய்யப்பட்டுள்ளன.
இது தவிர கடந்த ஐந்து மாதங்களில் ,HWCகளில் 1.41 கோடி மக்களுக்கு உயர் இரத்த அழுத்த
பரிசோதனைகள் நடைப்பெற்றுள்ளன,1.13 கோடி மக்களுக்கு சர்க்கரை நோய்க்கான
பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.1.34 கோடி பேர்களுக்கு வாய் ,மார்பக மற்றும் கர்ப்பப்பை
வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன..