இந்து மதம் பிடிக்கவில்லை என்றால், சாதி பிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாதி மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற்று கொள்ளலாம். அதற்கு சட்டபூர்வமான வழிமுறைகள் உண்டு. ஆனால் திருமாவளவன் அப்படி ஒரு சான்றிதழைப் பெற்று விட்டால் முதலாவது பறிபோவது அவரது பதவி தான்.
ஏனென்றால் சாதியையும் ஹிந்து மதத்தையும் அடிப்படையாக வைத்துதான் தனி தொகுதி ரிஸர்வேஷனில் அவர் எம்பி ஆனர் என்பது சட்டம் படித்த அவருக்கு தெரியாதா? அப்புறம் எதற்காக இந்த கபட வேடம்? அந்த அப்பாவி இளைஞர்களிடம் எதற்கு பொய்யை சொல்லி வெறுப்பை திணிக்கிறார்.
மேடைதோறும் சாதியை ஒழிக்க வேண்டும்
மதத்தை ஒழிக்க வேண்டும் என்று எதற்கு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ?
பட்டியலின மக்களின் குரல் என்ற போர்வையில் நீங்கள் படியளக்கும் எஜமானர்களுக்கு தான் இப்படி பேசுகிறீர்கள் என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது.
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திருமா. இனியாவது திருந்துங்கள்.
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் சூரியா.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















