திருக்கோவிலூரில் மத்திய பாஜக அரசின் சாதனைகள் குறித்த சுவர் விளம்பரங்களை அழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 1500க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுத்தி வரும் நல திட்டங்களை தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு வகையில் ஊருக்கு செல்வோம்! உம்மையே சொல்வோம்!! உரக்க சொல்வோம்!!! என்று விளம்பரப்படுத்தி வருகின்றனர்.அதன்படி விழுப்புரம் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர்,கண்டாச்சிபுரம்,கானை கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுவர் விளம்பரங்களாக பாஜகவினர் எழுதியுள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன் காணை, திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் எழுதப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காழ்புணர்ச்சி காரணமாக அழித்து வருவதாகவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் இன்று விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200 க்கும் மேற்ப்பட்டோர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரனோ தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இக்கால கட்டத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுக்கூடி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தியும் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















