பாரத நாட்டிற்க்கு கிடைத்திருக்கும் இந்த அற்புத பிரதமர் நரேந்திர மோடி யார்.
நாட்டில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை சாதாரணமாக தீர்த்து வைத்துள்ளார்.
இந்துக்களின் 500 ஆண்டு கனவான ராமபிரான் பிறந்த இடத்தில் ஆலயம் கட்ட போராட்டத்திற்கு முடிவுகட்டி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதேபோல் போல பிரச்சனைக்கு அவர் வரலாற்று சிறப்புமிக்க தீர்வும் கண்டுள்ளார்.
எந்தநிகழ்வுகளை காணும்பொழுது இந்நாட்டை ஆண்ட ராஜராஜ சோழனும், புகழ்சோழனும், நரசிம்ம பல்லவனும், சுந்தர பாண்டியனும் இன்னும் போக ராஜனும் புகழ்பெற்ற இறை அடியார்களாக இருந்த மன்னர்களும் எப்படி இருந்திருப்பார்கள் என்ற சிந்தனை அடிக்கடி எழும்.
தேசத்துக்கு அந்த காட்சியினை இப்பொழுதுதான் காண கொடுத்து வைத்திருக்கின்றது . அவர்கள் இந்த மன்னனை போலத்தான் நிச்சயம் இருந்திருப்பார்கள்
மோடி அவர்களின் வாரிசு.. தேசம் காலம் காலமாக எதிர்பார்த்திருந்த அந்த வீர ஞான வாரிசு..
இவர் நிச்சயம் அந்த அனுமனின் சாயல். விஸ்வரூபமெடுத்து மிகபெரும் விஷயங்களை முடித்துகாட்டி ராமன்முன் பணிவோடு நிற்கும் அந்த வீர அனுமனின் சாயல்..
இப்படி ஒரு ஞான தலைவனுக்குத்தான் ஏங்கி கிடந்தது தேசம்.மோடி ராமரை இப்படி வணங்க நாம் அவரை அப்படியே விழுந்து வணங்குகின்றோம்.
கட்டுரை :- வலதுசாரி எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.