திமுக தலைவர் ஸ்டாலின் தேசியக்கொடியை முதல்முறையாக தனது அலுவலகத்தில் ஏற்றினார்.
அவர் கொடி ஏற்றிய பின்பு வணக்கம் கூட வைக்காத்து குறித்து. சட்டவல்லுனர்கள் விளக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைைர் இராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்..
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.
உடன் திமுக கட்சி நிர்வாகிகள் இருந்திருக்கிறார்கள்.
சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றினால் கொடி வணக்கம் செய்வது;தமிழ் தாய் வாழ்த்து பாடுவது தேசியகீதம் பாடுவது; என்பது மரபு.
ஆனால் அவர் எந்த மரபுகளை எதுவுமே கடைப்பிடிக்காமல் தேசிய கொடி ஏற்றிய உடன் “தனது கட்சி கொடி ஏற்றிய நினைப்பில்” எந்த மரியாதையும் தேசியக்கொடிக்கு செய்யாமல், திமுக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் செல்வது கடும் கண்டனத்திற்கு உரியது.
சங்கராச்சாரியார் தமிழ் தாய் வாழ்த்து பாடவில்லை என்று கொந்தளித்தவர்கள்.இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
தமிழ்த்தாய் வாழ்த்தும் அண்ணா அறிவாலயத்தில் பாடப்படவில்லை;தேசிய கீதமும் அண்ணா அறிவாலயத்தில் பாடப்படவில்லை.இது குறித்து ஊடகங்கள் விவாதிக்கும் இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
இதற்கு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த லட்சணத்தில்வருங்கால முதலமைச்சர் கனவு வேறு இருக்கிறது!!
எல்லாம் காலக்கொடுமை?? சர்வாதிகாரி…