ஒன்றல்ல, இரண்டல்ல 243 வழக்குகளை இவர் மீது போட்டது கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம். எதற்காகவென்றால் சபரிமலை புனிதம் காக்க போராடியதால். 243 வழக்குகளை போட்டு ஒருவரை முடக்க ஒரு அரசாங்கமே துணிகிறதென்றால் அந்த அளவுக்கு அவர் கம்யூனிஸ்ட்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்றுதானே அர்த்தம் ?
வழக்குகள், சிறைவாசம், உயிருக்கு அச்சுறுத்தல் என்று கம்யூனிஸ்ட்கள் மிரட்ட மிரட்ட கேரள பாஜக மாநில பொதுச்செயலாளர் இருந்த சுரேந்திரன் அவர்களுக்கு கேரள மக்களிடம் குறிப்பாக இந்துக்களிடையே இவருக்கு செல்வாக்கு கூடிக் கொண்டேதான் இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் இவர் வென்றுவிடக்கூடாது என்பதற்காக இவர் பெயரில் பல வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுக்களை சிதறச் செய்ததுடன், வெளிநாட்டில் இருந்தவர்களின் ஓட்டுக்களை கள்ளத்தனமாக போட்டு வெறும் 89 வாக்கு வித்தியாசத்தில் இவரை தோற்கடித்தனர்.
இதில் கொடுமை என்னவென்றால் இறந்துபோன 200க்கும் மேற்பட்டவர்களின் ஓட்டுக்களையும் கள்ள ஓட்டாக போட்டிருந்தனர்.
இதையெல்லாம் ஆதாரத்தோடு வழக்கு தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி இவரை எதிர்த்து வெற்றி பெற்ற முஸ்லீம் லீக் வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பும் வந்துவிட்டது. அதற்கு முன்பாகவே வெற்றிபெற்றவரும் இறந்துவிட்டார்.
அமித் ஷா வுக்கு கடந்த தேர்தலில் குஜராத்துக்குள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டபோதுதான் உத்திரபிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுதந்து நாட்டை தன் பக்கம் திரும்ப வைத்தார்.
அதுபோலவே மஞ்சேஸ்வரத்தில் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தவரை வழக்குமேல் வழக்குப் போட்டு கேரள இந்துக்களின் நம்பிக்கை நாயகனாகவும், சபரிமலை ஐயப்பன் ஆசியோடு அவர் அருள் கொண்டிருக்கும் பத்தினம் திட்டா தொகுதியின் பாராளுமன்ற வேட்பாளராகவும் உயர்த்திய பெருமை கம்யூனிஸ்ட்களையே சாரும்..
அதுமட்டுமல்ல இன்று பாஜக மாநில தலைவராக உயர்த்திய பெருமையும் அவர்களையே சாரும்…
இவரையும், இவரது மன உறுதியையும், கடுமையான களப்பனியையும், கேரள பாஜகவுக்கு நல்லதொரு தலைவனையும் மக்களுக்கு எடுத்துக்காட்டிய கேரள இடதுசாரி கம்யூனிஸ்ட்களுக்கு கோடான கோடி நன்றிகள் !!
வலதுசாரி சிந்தனையாளரின் பதிவு.