சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த திறமை வாய்ந்த இளைஞர்களின் “மேம்பாடு மற்றும் முன்னேற்றம்’’ என்ற குறிக்கோளை கொண்டு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் காரணமாக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை, நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் 22 இளைஞர்கள், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் நடத்தும் “நய்உடான்” இலவசப் பயிற்சித்திட்டத்தின் உதவியுடன் சிவில்சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார்கள் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
மேலும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் இலவசப்பயிற்சித்திட்டத்தின் உதவியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற சிறுபான்மை சமுதாய இளைஞர்களை அந்த்யோதயா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டிய அமைச்சர் திரு.நக்வி, சிறுபான்மை சமுதாயத்தில் திறமைக்குப் பஞ்சமில்லை என்றும் காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மை சமுதாய இளைஞர்களிடம் உள்ள ஆற்றலை வெளிக்கொணரும் சூழலை ஏற்படுத்த எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார். மேலும் சிறுபான்மை சமுதாய இளைஞர்களின் திறமைகளைப் பாதுகாத்து,மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான சூழலை மோடி அரசு அளித்துள்ளதாக திரு. நக்வி கூறினார். இந்த ஆக்கபூர்வமான அணுகுமுறை காரணமாக, உயரிய நிர்வாகப் பணிகளுக்கு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்தஆண்டிலும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த 145 இளைஞர்கள் இந்தப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2014-க்கு முன்பு, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த 2 கோடியே 94 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது , ஆனால், தற்போதைய மோடி அரசின் கீழ் அரசின் கடந்த ஆறு ஆண்டுகளில், 4 கோடியே 60 லட்சம் சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.இந்த உதவித்தொகை பெற்ற பயனாளிகளில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.
பிரதமர் மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கடந்த 6 ஆண்டுகளில்,நாடு முழுவதும் நலிவடைந்த சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 34,000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2014-க்கு முன்பு இத்தகைய திட்டங்கள் 22,000 மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. 2014-க்கு முன்பு, நாட்டின் 90 மாவட்டங்கள் மட்டுமே சிறுபான்மை சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசு இதனை நாட்டின் 308 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. என மத்திய அமைச்சர் விழாவில் பேசினார்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















