அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் செல்வாக்குமிக்க இந்திய-அமெரிக்க வாக்காளர்களைக் கவரும் நோக்கில், டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் வீடியோ விளம்பரத்தை வெளியிட்டுள்ளது, இது பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகள் அடங்கிய காட்சிகள் உள்ளன.
“இன்னும் நான்கு ஆண்டுகள்” என்ற தலைப்பில் 107 விநாடிகள் கொண்ட வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.இந்திய-அமெரிக்கர்களிடையே பிரதமர் மோடி மிகவும் பிரபலமானவர். 2015 ஆம் ஆண்டில் மேடிசன் ஸ்கொயர் கார்டனிலும் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் அவர் உரையாற்றினார், இரண்டு கூட்டத்திற்கும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் கடந்த செப்டம்பரில் ஹூஸ்டனில் அவரது “ஹவுடி மோடி” நிகழ்ச்சியில், வரலாறு படைக்கும் வகையில், 50,000 பேர் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்க பேரணியில் மோடியுடன் இணைந்து உரையாற்ற டிரம்ப் ஹூஸ்டனுக்கு வந்தார்.
பிரதமர் மோடி டிரம்பை “எனது குடும்பத்தின் உறுப்பினர்” அறிமுகப்படுத்திய காட்சிகள் இடம்பெறுகின்றன. பின்னர், விளம்பரத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த பிப்ரவரியில் அகமதாபாத்தில் டிரம்ப் உரையாற்றிய காட்சிகள் இடம் பெறுகின்றன “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது. அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது. மேலும் அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்” என்று டிரம்ப் அந்த பிரச்சார வீடியோவில் கூறுகிறார், அதில் நான்கு மில்லியன் இந்திய-அமெரிக்கர்களின் பங்களிப்பை அவர் பாராட்டுகிறார்.
இந்த நிலையில் மோடி முகம் காட்டினால்தான் அமெரிக்காவில் வெற்றி முடியும் என்பதை இது காட்டுகிறது. மேலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இவர்களும் இந்தியாவின் துணை இல்லாமல் அதுவும் இந்துக்களின் துணை இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது “அமெரிக்கா, இந்தியா, மற்றும் உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்” என டெமாக்ரட் வேட்பாளர் ஜோ பைடன் ட்வீட். “நானும் வாழ்த்துகிறேன்” என துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரீஸ். தந்து டீவீட்டில் பதிவிட்டுள்ளார்.