நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு, கூடியது இதில் காங்கிரஸ் கட்சியின்தலைமையை மீண்டும் இடைக்கால தலைவரிடம் ஒப்படைத்தது . அவர் வேறு யாரும் இல்லை சோனியாவிடம் ஒப்படைத்துவிட்டு பெட்டி பாம்பை அடங்கி விட்டது இதன் மூலம் காங்கிரஸ் ஒரு வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. ஒரு கட்சி தலைவரை மீண்டும் அந்த கட்சிக்கு தலைவராக்கலாம் ஆனால் ஒரு இடைக்கால தலைவரை, ஓராண்டு கழித்து, மீண்டும் இடைக்கால தலைவராகவே தேர்ந்தெடுத்த வரலாற்று சாதனை படைத்திருக்கிறது காங்கிரஸ்.
நேரு குடும்ப பிடியில் மட்டும் தான் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்திருக்கிறது இந்த செயற்குழு. கிட்டத்தட்ட காங்கிரசின் 100க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களின் ஆதரவோடு முக்கிய தலைவர்கள், சோனியாவின் அதிகார பசியை போக்க புதிய தலைமை வேண்டும் என எழுதிய கடிதம் செயற்குழுவில் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் , மீண்டும் நேருவின் குடும்ப கைகளில் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. பாபு என்று அழைக்கப்படும் ராகுல் காந்தி தலைமைக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள் குற்றவாளிகள் என கூறியுள்ளார். அதுவும் பாஜகவின் ஆதரவாளர்கள் எனவும் குற்றம்சாட்டினார் .
காங்கிரஸ் இருக்கும் வரை, நேருவின் குடும்பத்தின் தலைமைதான் அவர்களுக்கு கட்சியின் மீதோ நாட்டின் மீதோ எந்தவித அக்கறையும் இல்லை அதில் உள்ள சொத்துக்கள் மீது மட்டுமே அக்கறை என்பதை வெட்டவெளிச்சமாகிறது.
“கட்சியில் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை அத்துமீறி செயல்படுகிறது” என குற்றம் சாட்டுபவர்கள், தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கலாம். நீதிமன்றம் செல்லலாம். தலைமை நீதிபதிக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? அவரால் இதில் தலையிட முடியாது. தனக்கு வந்த கடிதத்தை அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம் அல்லது வழக்கு பதிய சொல்லலாம். இது தெரியாதவரில்லை என கூறுகிறார் வழக்கறிஞர் கபில் சிபல்…
மேலும் சமீப காலமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவருகிறது காங்கிரஸ்.சீனாவோடு நட்பு பாராட்டி வருகிறது. பாகிஸ்தானின் குரலாக காங்கிரஸ் இருக்கிறது 370 மீண்டும் வேண்டும் என பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையினை பேசிவருவது குறிப்பிடதக்கது.